Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் பல்கலைக்கழக மாணவி பாவனா... படுக்கை அறையில் இருந்த காட்சி.. யார் அந்த காதலன்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா ஹெப்பலகுப்பே என்ற கிராமத்தைச் சேர்ந்த 23 வயதாகும் பாவனா என்ற பெண், பெங்களூர் ஞானபாரதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் கலை நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட பாவனா பின்னர் விடுதிக்குள் சென்றார். ஆனால் திரும்ப வரவே இல்லை. அங்கிருந்த கோலத்தை பார்த்து சக தோழிகள் ஆடிப்போனார்கள்.

கல்லூரியில் படிக்கும் போது ஏற்படும் காதல் விவகாரங்கள் பெரும்பாலும் பிரச்சனை ஆகிவிடுகிறது. ஒன்று காதலன் அல்லது காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இல்லை என்றால் காதல் குறித்து சரியான புரிதல் இல்லாமல் சண்டை ஏற்பட்டு பிரிந்துவிடுவார்கள். இதில் பாதிக்கப்படும் பெண் அல்லது ஆண் வாழ்வில் சில நேரங்களில் தவறான முடிவெடுக்கிறார்கள். அதேபோல் காதலன் அல்லது காதலி ஏமாறும் போதும் தவறான முடிவெடுக்கிறார்கள். அப்படித்தான் ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

bangalore university student

கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா ஹெப்பலகுப்பே கிராமத்தை சேர்ந்த 23 வயதாகும் பாவனா என்பவர், பெங்களூர் ஞானபாரதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இதற்காக அங்குள்ள கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார் மாணவி பாவனா.

இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழகத்தில் கலை நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இந்த கலை நிகழ்ச்சியில் பாவனாவும் தோழிகளுடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியாகவே இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திடீரென்று விடுதிக்கு சென்று வருவதாக கூறிய பாவனா அதன் பின்னர் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வரவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு படுக்கை அறையில் பாவனா மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து ஆடிப்போன சக தோழிகள் உடனே கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்

இதுகுறித்த புகாரின் பேரில் பெங்களூர் ஞானபாரதி பகுதி போலீசார் விரைந்து பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அங்கு விடுதி அறையில் இருந்த கல்லூரி மாணவி பாவனாவின் உடலை கைப்பற்றினார்கள். தொடர்ந்து பாவனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் பாவனா உயிரைவிடும் முன்பு கைப்பட ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், எனது இந்த முடிவுக்கு காதலன் தான் காரணம். நான் அவனை நம்பி ஏமாந்துவிட்டேன். என்னை காதலித்து ஏமாற்றிவிட்டான். இந்த காதல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, அப்பா. ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ என்று குறிப்பிட்டிருந்தாராம். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் உடன் தங்கியிருந்த தோழிகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவனாவின் காதலன் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+