ஃபிரிட்ஜ்ஜில் 50 துண்டாக கிடந்த பெண்.. உடல் உறுப்பை இணைத்து.. மிரண்ட பெங்களூர் டாக்டர்கள்.. என்னாச்சு
பெங்களூர்: கடந்த 2 நாட்களாகவே பெங்களூரில் நடந்த கொடூர கொலையின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை. கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்ன நடந்தது? என்பது குறித்த தீவிரமான விசாரணையை போலீசார் முன்னெடுத்துள்ளனர்.
பெங்களூருவின் வயலிக்காவல் பகுதியில் மகாலட்சுமி என்பவர் வீட்டில், 2 நாளைக்கு முன்பு துர்நாற்றம் அதிகமாக வீசியிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசித்து வருபவர்கள், உடனடியாக மகாலட்சுமியின் அம்மாவுக்கு தகவல் தந்துள்ளனர்.

அம்மா: இதனால், மகாலட்சுமியின் அம்மாவும், சகோதரியும் அங்கு விரைந்து வந்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போதுதான், மகாலட்சுமியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பதை கண்டு அலறினார்கள். கிட்டத்தட்ட 50 துண்டுகளாக அந்த சடலம் வெட்டப்பட்டு கிடந்தன. அதில், ஏராளமான புழுக்களும் ஏறியிருந்தன..
இதுகுறித்து நேரில் விசாரணை மேற்கொண்ட கூடுதல் காவல் ஆணையர் சொல்லும்போது, "10 நாட்களுக்கு முன்பே இந்த கொலை நடந்திருக்கலாம்.. கொலையாளியை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
திருமணம்: மகாலட்சுமிக்கும் ஹேமந்த்தாஸ் (32) என்பருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். ஆனால், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி கணவரை விட்டு பிரிந்து பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள பசப்பா கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியிலுள்ள ஒரு மாலில் வேலை பார்த்தும் வந்துள்ளார்.
அப்போது அஷ்ரப் என்பவருடன் மகாலட்சுமிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மகாலட்சுமியை வேலைக்கு வரும்போது, தினமும் இந்த இளைஞர்தான் வேலைக்கு அழைத்து வந்துள்ளார்.. அஷ்ரப் பெங்களூருவில் உள்ள ஆண்களுக்கான சலூன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்
உத்தரகாண்ட்: இவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவராம்.. அஷ்ரப் என்ற இளைஞரால்தான், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.. பிறகு ஹேமந்த் தாஸ் மகாலட்சுமியை விட்டு பிரிந்துவிட்டாராம்.. எனவே, அஷ்ரப் என்ற நபரை பிடித்தால்தான் எல்லா உண்மையும் தெரியவருமாம்.
இதனிடையே மகாலட்சுமியின் சடலமானது, 30 துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை இன்று போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுள்ளது.. இதற்காக உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டது. இந்த போஸ்ட் மார்ட்டமானது, போலீசாருக்கே மிகப்பெரிய சவாலாக விளங்கியது.
கால்கள்: இதில், மகாலட்சுமியின் தலையை மட்டுமே 3 பகுதிகளாக வெட்டப்பட்டிருந்ததாம். அவரது கால்கள் துண்டிக்கப்பட்டு, குடல், தலைமுடி உள்ளிட்ட பிற பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் தனியாக கட்டப்பட்டிருந்தது.
மொத்த உடல் உறுப்பு துண்டுகளையும் டாக்டர்கள் ஒன்றிணைத்து இந்த சிக்கலான போஸ்ட் மார்ட்டத்தை துவக்கினார்கள்.. உடல் பாகங்களை வரிசை எண் போட்டு டாக்டர்கள் ஒன்றாக சேர்த்தனர். அதில் ஏதேனும் பாகங்கள் விடுபட்டுள்ளதா? என்றும் அதன் பிறகு உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா? என்றும் பார்க்கப்பட்டது. அதேபோல, மகாலட்சுமி தான் என்பதை அடையாளம் காண உடல் பாகங்கள் தனித்தனியாக டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது
உடல் பாகங்கள்: பிளாஸ்டிக் கவரிலிருந்த உடல் பாகங்களை ஒன்றாக சேர்த்து சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. பாலியல் தொல்லை தந்து கொலை செய்யப்பட்டாரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. மிகவும் போராடியே இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை டாக்டர்கள் செய்துள்ளனர். நாளை, இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துவிடும் என்கிறார்கள்.
இதனிடையே, மகாலட்சுமியின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.. அப்போது, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் கொலையாளி பற்றிய முக்கிய துப்பு தனிப்படை போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.. பெண் கொலை வழக்கில் போலீசாருக்கு முக்கிய துப்பு கிடைத்திருப்பதால், கூடிய விரைவில் கொலையாளி கைது செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பில் நம்பிக்கை சொல்லப்படுகிறது
ஸ்விட்ச் ஆப்: இந்த கொலை வழக்கு தொடர்பாக மகாலட்சுமி வேலை பார்த்து வந்த மாலில் பணியாற்றும் உத்தரகாண்டை சேர்ந்த இளைஞர் உள்பட 4 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 4 பேருமே செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளதால், அவர்களை பிடிக்க போலீசார் தயாராகி வருகிறார்கள்.. தற்போது மகாலட்சுமி வசித்த வீட்டை சுற்றியுள்ள கண்காணிப்பு காமிராக்களில் சில முக்கிய காட்சிகள் சிக்கி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications