மார்பக புற்றுநோய்.. கேட்கவே வியப்பா இருக்கு. பெங்களூருவில் இப்படியொரு நபரா? யாரந்த நண்பரின் மனைவி?
பெங்களூர்: பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.. யாரிந்த அசோக்? அவர் வைத்திருக்கும் பழக்கடை என்ன ஆனது?
திருச்செந்தூரில் 10 நாட்களுக்கு முன்பு ஒரு திருட்டு சம்பவம் நடந்தது.. சித்திரை செல்வின் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் இந்த திருட்டு நடந்தது.. இவர் வெளியூருக்கு சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், ஒன்றரை பவுன் கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு போன்றவை கொள்ளை போயிருந்தன.

இதனால், சித்திர செல்வன், மெஞ்ஞானபுரம் போலீசில் இதுகுறித்து புகார் தரவும், போலீசாரும் வீட்டிற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தை, திருடனே எழுதி வைத்துவிட்டு போயிருந்ததும் தெரியவந்தது.
பச்சை எழுத்து: அந்த கடிதத்தில், "என்னை மன்னித்து விடுங்கள்... நான் இன்னும் 1 மாதத்தில் இந்த பணம், நகையை திருப்பி தந்து விடுகிறேன். என் மனைவிக்கு உடம்பு சரியில்லை. மருந்து வாங்க காசில்லை.. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் மருத்துவச் செலவுக்காக திருடினேன்" என்று எழுதப்பட்டிருந்தது.. பச்சை நிற மை பேனாவால் எழுதிய கடிதத்தை பார்த்ததுமே விக்கித்த போலீசார், அந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி, அதிலுள்ள கைரேகையை பதிவு செய்து திருடனை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பெங்களூருவில் வேறு விதமான திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. கர்நாடக மாநிலம், பெங்களூரில் பழக்கடை வைத்திருக்கிறார் அசோக்.. ஆனால் இவரது கடையில் பழங்கள் சரியாக விற்பனை ஆகவில்லை.. பழக்கடையில் வியாபாரம் பெருகி எப்போது பணக்காரராவது? என்று கவலைப்பட்டார் அசோக்.
காஸ்ட்லி பைக்: சீக்கிரமாகவே பணக்காரனாக வேண்டும் என்றால் திருடுவதுதான் சரியான வழி என்று முடிவெடுத்தார்.. விரைவாகப் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில், முதலில் பைக்குகளை திருட தொடங்கியிருக்கிறார். காஸ்ட்லி பல்சர், கேடிஎம் பைக்குகளை குறிவைத்தே இந்த திருட்டு நடந்துள்ளது..
ஆனால், போலீசாரால் அசோக் கைது செய்யப்பட்டார். எனினும், ஒரு மாதசிறைத்தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
திருட்டு தொழில்: வெளியே வந்ததுமே, ஒரு மாதத்திற்கு பிறகு மறுபடியும் திருட தொடங்கியிருக்கிறார்.. அந்தவகையில், கிரி நகரில் உள்ள சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரின் பைக்கை திருடியிருக்கிறார்... எனினும் சில அடையாளங்களை வைத்து, குற்றவாளி அசோக் என்பதை காவல்துறை கண்டுபிடித்து, அசோக்கை விசாரித்தது.. அப்போதுதான், திருட்டுக்கான காரணத்தை போலீசில் சொன்னார் அசோக்..
அசோக்குக்கு கல்யாணமாகிவிட்டது.. ஆனால், மனைவியை பிரிந்துவிட்டாராம்.. இதனால், தன்னுடைய நண்பன்தான் அடைக்கலம் தந்து, தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறாராம். அப்படி தங்கியிருக்கும்போதுதான், அந்த நண்பனின் மனைவிக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளது தெரியவந்திருக்கிறது. சிகிச்சைக்கு பணம் குறைவாக இருந்ததால்தான், பைக்கை திருடி விற்ற பணம் முழுவதையும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது நண்பரின் மனைவியின் சிகிச்சைக்காக தந்து வந்தாராம் அசோக்.
காரணம்: முதல்முதலில், இதற்காகத்தான் பைக்குகளை திருடவே சென்றாராம்.. ஜெயிலிலிருந்து வெளியே வந்தபோது திருடக்கூடாது என்றே முடிவு செய்திருந்தாராம். ஆனாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நண்பனின் மனைவிக்கு சிகிச்சை செய்ய முடியாமல் நண்பன் படும்பாட்டைப் பார்த்து மறுபடியும் திருட ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார்.. அடைக்கலம் தந்த நண்பனுக்கு நன்றி உணர்வுடன் இருக்கணும்தானே? என்று கேட்கிறார் அசோக்..
அசோக் என்ற திருடனை பற்றின இந்த செய்திதான் பெங்களூருவில் பேசுபொருளாகியிருக்கிறது.. அசோக் வைத்திருந்த அந்த பழக்கடை என்னவானது என்றே தெரியவில்லை..!!
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications