பக்குனு பத்திக்கிச்சு.. தொழிலாளியை சாய்த்த "சினேகா".. பாவம் அந்த பாஜக பிரமுகர்.. மாஸ்டர்மைன்ட் மனைவி
பெங்களூர்: கூடா நட்பு கேடாய்தானே முடியும்? இந்தம்மா செய்த வேலையை பாருங்க.. கர்நாடக மாநிலமே கதிகலங்கி போயிருக்கு..!!
கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ளது சிங்கனோடி தாண்டா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ராஜு நாயக்.. 38 வயதாகிறது.. இவர் ஒரு பாஜக பிரமுகர்.. உள்ளூரில் ரொம்ப பிரபலமானவராம்.. தாலுகா பஞ்சாயத்து போர்டு உறுப்பினராகவும் பதவி வகித்து வருபவர்.

இவரது மனைவி பெயர் சினேகா.. 26 வயதாகிறது.. இவர்களது கிராமத்தில் கோயில் ஒன்றை புனரமைத்து வருகிறார்கள்.. அந்த கோயிலுக்கு கோபுரம் கட்டும் பணியும் நடக்கிறது.
கோயில் கோபுரம்: இந்த பணிக்காக மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலாளர்கள் இவர்களது கிராமத்துக்கு வந்திருக்கிறார்கள்.. அந்த தொழிலாளர் கூட்டத்திலிருந்த ஒருவரை சினேகாவுக்கு பிடித்துவிட்டது. அந்த தொழிலாளியுடன் நெருங்கி பேசியிருக்கிறார்..
ஊர் விட்டு ஊர் வந்த தொழிலாளியும், சினேகாவிடம் நெருக்கமாக பழகியுள்ளார்.. இவர்களது தொடர்பு நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. ஒருகட்டத்தில் கணவர் ராஜுவுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது.. இதனால், சினேகாவை கண்டித்தார். அந்த தொழிலாளியுடன் பழகுவதை கைவிடுமாறு சொன்னார்.. பலமுறை கெஞ்சி பார்த்தார்.. ஆனால் சினேகா கேட்கவில்லை.
கள்ளக்காதல்: நாளடைவில் கணவன் மனைவிக்கு இடையே நிறைய தகராறு அதிகரிக்க துவங்கிவிட்டன.. நாளுக்கு நாள் கணவனின் அட்வைஸ் அதிகரிக்கவும், அவரை கொலை செய்வதென்று முடிவெடுத்தார் சினேகா..
ஆனால், எப்படி கொலை செய்தாலும், போலீசில் தான் சிக்கிவிடக்கூடாது என்று முடிவெடுத்து, நிறைய திட்டங்களை யோசித்தார். இறுதியில், ராஜூவுக்கு இருக்கும் குடிப்பழக்கத்தை வைத்தே அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார்.
அதன்படி நேற்றிரவு, ராஜு நாயக் குடிக்கும் மதுவில், நிறைய தூக்க மாத்திரைகளை போட்டு கலந்துவிட்டார்.. இது தெரியாமல் ராஜூ அந்த மதுவை குடித்து, சிறிது நேரத்திலேயே சரிந்து விழுந்து மயங்கிவிட்டார்.. இதற்காக காத்திருந்த சினேகா, ராஜுவின் கழுத்தை பலமாக இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி ராஜூ இறந்துவிட்டார்..
போஸ்ட் மார்ட்டம்: போஸ்ட் ஆனால், ராஜுவின் குடும்பத்தினருக்கு சந்தேகம் வலுத்தது.. இதனால் யாப்பல்தினி போலீஸாரிடம் ஓடினார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து ராஜு நாயக் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்னனர்.. இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை.. ஆனால், போலீசார் சினேகாவை கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்..
சினேகாவை "சாய்த்த" அந்த தொழிலாளி இப்போது எங்கிருக்கிறார்? என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஆனால், அநியாயமாக ஒரு உயிர் பிரிந்துவிட்டது..!!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications