கால்களை சங்கிலியால் கட்டி டிரைவர் சித்ரவதை.. காரணத்தை பாருங்க.. கர்நாடகாவில் நடந்த கொடுமை
பெங்களூர்: கர்நாடகாவில் வேலைக்கு வருவதாக கூறி ரூ.20 ஆயிரம் வாங்கி கொண்டு பணிக்கும் செல்லாமல், கொடுத்த பணத்தை திரும்பவும் கொடுக்காமல் இருந்த டிரைவரை 2 பேர் சங்கிலி போட்டு கட்டி வைத்து சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். கர்நாடகாவை உலுக்கி உள்ள இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் சடசனா தாலுகா கொடிஹால் கிராமத்தை சேர்ந்தவர் பாஷா சாப். இவருக்கு 38 வயது ஆகிறது. டிரைவர் வேலை செய்து வருகிறார்.

இவர் குமார் பீராதார என்பவரிடம் டிரைவர் வேலை கேட்டு சென்றார். குமாரும் அவருக்கு வேலை போட்டு கொடுத்தார். அதோடு பாஷா சாப் கேட்டு கொண்டதன் பேரில் ரூ.20 ஆயிரத்தை முன்பணமாக குமார் பாஷா சாப்பிற்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பணத்தை பெற்று கொண்ட பாஷா சாப், சொல்லியபடி டிரைவர் வேலைக்கு செல்லவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை கூறி இன்று வருகிறேன்.. நாளை வருகிறேன் என்று குமாரை ஏமாற்றி உள்ளார். ஒரு கட்டத்தில் குமாரின் செல்போனில் இருந்த அழைப்பு சென்றால் அதனை பாஷா சாப் எடுத்து பேசவில்லை. கூறியபடி வேலைக்கு செல்லாத பாஷா சாப், அட்வான்ஸாக வாங்கிய ரூ.20 ஆயிரத்தையும் குமாரிடம் திரும்ப கொடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது நண்பர் ஸ்ரீசைலா என்பவருடன் சேர்ந்து பாஷா சாப்பை மோட்டார் சைக்கிளில் ஹத்தள்ளி கிராமத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் பாஷா சாப் கையில் பணம் இல்லை. இதனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த குமார் மற்றும் ஸ்ரீசைலா ஆகியோர் பாஷா சாப் காலில் சங்கிலி போட்டு இரும்பு கம்பியில் கட்டிவைத்தனர்.
மல்லிகார்ஜூனா என்பவரின் கடையில் இருந்த கம்பியில் கட்டி வைத்தனர். மேலும் அவரை ஆபாசமாக திட்டினர். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. பலரும் கடுமையாக கண்டித்தனர். இதுதொடர்பாக விசாரணை சடசனா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக பாபா சாப்பை சங்கிலி போட்டு கட்டி வைத்த புகாரில் குமார் மற்றும் ஸ்ரீசைலா ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக விஜயாப்புரா எஸ்பி லட்சுமண் நிம்பரகி கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications