நாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்
பெங்களூரு: நாக்கில் ஏற்படும் கடும் வறட்சி மற்றும் எரிச்சல் கொரோனா பாதிப்பிற்கு புதிய அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் அலையில் அறிகுறிகள் முற்றிலுமாக வேறு மாதிரியாக உள்ளது.
முதல் அலையில் காய்ச்சலே பெரும்பாலும் அறிகுறியாக இருந்த நிலையில், இரண்டாம் அலையில் உடல் சோர்வு, வாசனை இழப்பு உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் சிலருக்கு நாக்கில் கடும் வறட்சி ஏற்படுவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாக்கு வறட்சி
இவர்களுக்கு நாக்கில் வறட்சியும் நமைச்சலான உணர்வும் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு எவ்விதமான கொரோனா அறிகுறிகளும் இவர்களுக்கு இல்லை. இது குறித்து கொரானா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் டாக்டர் ஜிபி சத்தூர் கூறுகையில், "55 வயது மதிக்க ஒருவர் மிகவும் சோர்வாக இருப்பதாகவும் நாக்கில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். அவருக்குக் காய்ச்சல் உள்ளிட்ட வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்" என்றார்.

காரணம் என்ன
இந்த புதிய கொரோனா அறிகுறி குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். இங்கிலாந்து, பிரேசில் கொரோனா வகை, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இரட்டை மரபணு மாறிய கொரோனா வகை காரணமாக இந்த புதிய அறிகுறி ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது வரை இது குறித்து உறுதியான தகவல் இல்லை.

புதிய கொரோனா அறிகுறிகள்
கோவிட் நாக்கு என்று அழைக்கப்படும் இந்த அறிகுறி நாக்கில் எரிச்சல், அரிப்பு, தெளிவற்ற உணர்வு, வாய் புண் மற்றும் தீவிர வறட்சி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. கொரோனா நோயாளிகளுக்குக் காய்ச்சல் இல்லை என்றாலும் கடும் சோர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே, நோயாளிகள் தங்கள் நாக்கில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தால் மருத்துவர்கள் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் டாக்டர் ஜிபி சத்தூர் தெரிவித்தார்.

உருமாறிய கொரோனா
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B 1.617.2 கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகை என பட்டியலிட்டுள்ளது. இந்த வகை கொரோனா தான் இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இருப்பினும், இது தீவிர பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதற்கோ தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாது என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை.
-
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே!












Click it and Unblock the Notifications