இரக்கமே இல்லை.. செல்ல மகளை இழந்த தந்தையிடம் போலீஸ் - மாநகராட்சி ஊழியர்கள் கேட்ட லஞ்சம்! கலங்க வைக்கும் சம்பவம்
பெங்களூர்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவக்குமார் தனது ஒரே மகளை செல்லமாக வளர்த்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது மகள் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு பிரச்சனையால் காலமானார். இந்த துக்கத்தில் இருந்த சிவக்குமாரிடம் ஆம்புலன்ஸ், போலீஸ் அதிகாரிகள் முதல் மாநகராட்சி ஊழியர்கள் வரை அடுத்தடுத்து லஞ்சம் கேட்ட சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் கே சிவக்குமார். இவர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது ஒரே மகள் அக்சயா (வயது 34). இதனால் அவர் செல்லமாக வளர்க்கப்பட்டார்.

அக்சயா, பிடெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தார். அதன்பிறகு அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-மில் எம்பிஏ படிப்பை முடித்தார். கோல்ட்மேன் சாக்ஸ்(Goldman Sachs) முதலீட்டு வங்கியில் 8 ஆண்டுகள் உள்பட மொத்தம் 11 ஆண்டுகள் பணியாற்றினார்.
இந்நிலையில் தான் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக அக்சயா கடந்த செப்டம்பர் 18 ம் தேதி காலமானார். அதன்பிறகு குடும்பத்தினர் சடங்குகள் செய்து இறுதி மரியாதையுடன் தகனம் செலுத்தினர். இந்நிலையில் தான் அக்சயாவின் மரணத்தை வைத்து தன்னிடம் ஆம்புலன்ஸ் டிரைவர், காவல்துறையினர், தகன மேடையில் வேலை செய்வோர், பெங்களூர் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் என அனைவரும் லஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார்.
அக்சயாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. முறையான ஆவணங்கள் இருந்தும் கூட அவர்கள் லஞ்சம் கேட்டு தொல்லை செய்ததாக உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே சிவக்குமார் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
‛‛சமீபத்தில் நான் எனது ஒரேயொரு மகளை அவளது 34வது வயதில் இழந்தேன். என்னிடம் ஆம்புலன்ஸ் டிரைவர், எப்ஐஆர் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார், தகனமேடை ஊழியர்கள், இறப்பு சான்றிதழ்களுக்கு பெங்களூர் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் வெளிப்படையாக என்னிடம் லஞ்சம் கேட்டனர். எப்ஐஆர் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் வழங்க லஞ்சம் கேட்டனர். என் மகள் இறந்த 4வது நாளில் ஓபனாக லஞ்சம் கேட்டனர். போலீஸ் நிலையத்தில் வைத்து லஞ்சம் கொடுத்தேன்.
ஒரெயொரு மகளை இழந்த தந்தை என்ற இரக்கம் யாருக்கும் இல்லை. இந்த நிலை ரொம்ப கவலைக்குரியது. என்னிடம் பணம் இருந்தது. இதனால் நான் பணம் கொடுத்தேன். ஆனால் ஏழைகள் என்ன செய்வார்கள்? . அதேபோல் ஆம்புலன்ஸ் டிரைவர் எனது மகளின் உடலை கசவனஹள்ளியில் உள்ள மருத்துவமனையில் இருந்து கோரமங்களாவில் உள்ள தூய யோவான் மருத்துவமனைக்குஎடுத்து வர ரூ.3 ஆயிரம் கேட்டார்.
மகளை இழந்து துயரில் இருக்கும் ஒருவரிடம் பணம் கேட்கும்போது போலீஸ் அதிகாரிகளுக்கு குடும்பம் இருக்கிறதா அல்லது அவர்களுக்கு உணர்வுகள் இருக்கிறதா என்ற கேள்வி வருகிறது. என் மகளின் இறப்பு சான்றிதழ் வாங்க 5 நாட்கள் மாநகராட்சி அலுவலகம் சென்றேன். தற்போதைய சாதி வாரி கணக்கெடுப்பு பணியால் யாரும் அலுவலகத்தில் இருப்பது இல்லை. மூத்த அதிகாரியிடம் பேசியபோது தான் மகளின் இறப்பு சான்றிதழ் கிடைத்தது. ஆனாலும் கூட அதிகாரப்பூர்வமான கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலித்தனர்.
கோடிக்கணக்கில் பணத்தைக் கொண்டு பெரிய மனிதர்களாக இருக்கும் நாராயண மூர்த்தி (இன்போசிஸ் நிறுவனர்), அசிம் பிரேம்ஜி (விப்ரோ நிறுவனர்) மஜும்தார் (பயோகான் நிறுவனர்) உள்ளிட்டவர்களால் இந்த நகரத்தைக் காப்பாற்ற முடியுமா?'' என்று எழுதியிருந்தார்.
இந்த பதிவை பார்த்த பலரும் சிவக்குமாருக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் அவர் எதிர்கொண்ட பிரச்சனை கண்ணீர் வரவழைப்பதாக தெரிவித்தனர்.அதோடு, போலீஸ் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிர்ப்பை பதிவிட்டனர். இந்த பதிவு வைரலான நிலையில் சிவக்குமார் அதனை டெலிட் செய்துள்ளார். இருப்பினும் அவரது பதிவின் ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications