மதம்.. வட இந்திய டிவி சேனல்களுக்கு செக் வைக்கும் கர்நாடக அரசு.. பிரபல செய்திவாசிப்பாளர் மீது வழக்கு
பெங்களூர்: பிரபல தனியார் இந்தி தொலைக்காட்சியான ஆஜ் த்க்கின் செய்தி வாசிப்பாளர் சுதிர் சவுத்ரி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறி அவருக்கு எதிராக கர்நாடக காவல் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளது.
இந்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமான முகமாக அறியப்படுபவர் சுதிர் சவுத்ரி. இவர் கர்நாடக அரசின் வணிக வாகன மானிய திட்டம் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், இந்த மானிய திட்டங்கள் எல்லாம் சிறுபான்மையினருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் இந்துக்களுக்கு வழங்கப்படுவது இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கர்நாடக அரசு இதுபோன்ற தவறான தகவலை வெளியிட்டதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக நாளிதழில் பாஜக எம்பி வெளியிட்டு இருந்த விளம்பரத்திலும் கர்நாடக காங்கிரஸ் அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமே சாதகமாக நடந்துகொள்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியிலும் இந்த திட்டம் அமலில் இருந்துள்ளது. அப்போது சிறுபான்மை சமுதாயத்தினர் இதனால் பயனடைந்தார்கள் என்பது காங்கிரஸ் கட்சியினரின் வாதம்.
ஆஜ் தக்கில் வெளியான செய்தியை குறிப்பிட்ட கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே, "தீங்கிழைக்கும் செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டு உள்ளார்கள். அரசு இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்." என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக கர்நாடக சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பெங்களூர் சேஷாதிரிபுரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டியதாக ஆத் தக் செய்தி வாசிப்பாளர் சுதிர் சவுதாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் அரசு அநீதி இழைத்துள்ளதாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்து உள்ளார். இது மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சதி." என போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். இதில் ஏ1 குற்றம்சாட்டப்பட்டவராக, ஏ2 வாக தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஏ3 யாக ஆஜ் தக் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளரும் சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications