பெரும் சோகம்! அத்திப்பள்ளி அருகே பட்டாசு கடையில் தீ.. பலியான 13 பேரும் தருமபுரியை சேர்ந்தவர்கள்
பெங்களூர்: தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துளனர். உயிரிழந்த 13 பேரும் தருமபுரி அம்மாபேட்டையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடைக்குள் ஊழியர்கள் சிலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கர்நாடக மாநிலம் அத்திப்பளியில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் மற்றும் கர்நாடகவை சேர்ந்தவர்கள் பட்டாசு வாங்குவது வழக்கம். அந்த வகையில் தீபாவளிக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில் அத்திப்பள்ளி அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான கடையில் பட்டாசுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திடீரென நவீன் என்பவரின் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில், தீ மேலும் பரவி அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. இதனால் 5 கடைகள் கொழுந்துவிட்டு எரிந்தது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் தீயணைப்பு துறையினர் வருவதற்கு தீ மளமளவென எரியத்தொடங்கியது.
இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு தீ விபத்தில், கடையில் இருந்த ரூபாய் 1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் ஊழியர்கள் சிலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மேலும் ஓசுர்- பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம், கர்நாடக போலீசார் இணைந்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தினர். பட்டாசு கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள், வேன் மற்றும் சரக்கு லாரி தீயில் கருகி எலும்புக்கூடாகியது.

தீ பிடித்ததால் பட்டாசுகள் வெடித்து சிதறி அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. உயிரிழந்தவர்கள் உடல் முழுவதும் கருகி அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தது. இவர்கள் 13 பேரும், தர்மபுரி, அம்மாபேட்டை பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications