அப்போ 1000-இப்போ 2000! பிரதமர் மோடி ஜப்பான் சென்றாலே ரூபாய் நோட்டு ரத்தாகுதே! கார்கே சந்தேகம்
பெங்களூர்: பிரதமர் மோடி ஜப்பான் செல்லும்போதெல்லாம் ரூபாய் நோட்டுகளை தடை செய்கிறார். அன்று ரூ.1000 தடை செய்த பிரதமர் மோடி இன்று ரூ.2000 நோட்டை தடை செய்துள்ளார் என கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழா மேடையில் விமர்சனம் செய்தார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. இதன்மூலம் கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதோடு மட்டுமின்றி தென்மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் கிங்மேக்காராக மாறலாம் என காத்திருந்த ஜேடிஎஸ் கட்சிக்கும் பெரிய சறுக்கல் ஏற்பட்டது. இந்த கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதுதவிர மற்றவர்கள் 4 பேர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வராக இன்று சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றார். மேலும் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த பதவியேற்பு விழா பெங்களூரில் நடந்தது. விழாவில் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தின்போது 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகள் முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். கடந்த முறையும் காங்கிரஸ் ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாங்கள் பாஜக போல் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று என செயல்படமாட்டோம்.

பிரதமர் மோடி இப்போது இன்னொரு உத்தரவு போட்டுள்ளார். அவர் ஜப்பான் செல்லும்போதெல்லாம் ரூபாய் நோட்டுகளை ரத்து செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த முறை ஜப்பான் சென்றபோது ரூ.100 நோட்டுகளை ரத்து செய்தார். இந்த முறை ஜப்பான் சென்றபோது ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ரத்து செய்துள்ளார். இப்படி செய்வதால் லாபம் ஏற்படுகிறதா? நஷ்டம் ஏற்படுகிறதா? என்பது பற்றி பிரதமர் மோடி எதுவும் தெரிவிப்பது இல்லை. மோடியின் இத்தகைய செயல்பாடு நாட்டு மக்களுக்கு தொல்லையை கொடுக்கின்றன'' என விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ளார். நேற்று ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு ஜப்பான் பிரதமர் மற்றும் பிற நாடுகளில் தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும் ஜப்பானில் ஹிரோசிமா நகரில் மார்பளவு காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் தான் ஜப்பான் பயணத்தை சுட்டிக்காட்டி மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications