பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. கண்ணாடி போட்டு.. வெள்ளை தொப்பியோடு வந்த நபர்.. ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் நேற்று குண்டு வெடித்த ராமேஸ்வரம் கஃபேவின் முக்கியமான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. குற்றவாளி என்று கருதப்படும் நபரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயானது இன்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

இது பெரிய அளவிலான குண்டுவெடிப்பு அல்ல, இது ஒரு தற்செயலான வெடிகுண்டு. இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன, இது நடக்கக்கூடாது. அது என்னவென்று பார்ப்போம். சமீப காலங்களில், இதுபோன்ற குண்டுவெடிப்புகள் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் நடந்துள்ளது. . பாஜக ஆட்சியின் போது மங்களூரு பகுதியில் இப்படி நடந்தது. எங்கள் ஆட்சியின் போது இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
கைது; இதில் கைதானவர் யார் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை. குண்டுவெடிப்பில் காயமடைந்த 19 வயது ஓட்டல் ஊழியர் ஃபரூக், அமேசான் ஊழியர் தீபன்சு (23), ஸ்வர்ணாம்பா (49), மோகன் (41), நாகஸ்ரீ (35), மோமி (30), ஆகியோர் காயமடைந்தனர். பலராம் கிருஷ்ணன் (31), நவ்யா (25), ஸ்ரீனிவாஸ் (67) ஆகியோர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.
என்ன நடந்தது?: பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல் வெளியிட்டு உள்ளார். பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில், ஓட்டலுக்கு சாப்பிட வருவது போல வந்த வாடிக்கையாளர் ஒருவர்... தான் கையோடு கொண்டு வந்த பையை ஓட்டலில் வைத்து விட்டு சென்றதாகவும், அவர் விட்டு சென்ற பை ஒன்றில் இருந்த பொருள்தான் வெடித்ததாக முதல் கட்ட புகார்கள் தெரிவிக்கின்றான்.
சிசிடிவியில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 28 முதல் 30 வயதுடையவர் என்று அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ஓட்டலில் ரவா இட்லிக்கான கூப்பனை எடுத்துக் கொண்டார், ஆனால் சாப்பிடாமல் சென்றுவிட்டார்.
வீடியோ: குற்றவாளி என்று கருதப்படும் நபரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பி அனைத்து ஒருவர் உள்ளே செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. ரவா இட்லி வாங்கிவிட்டு அதை சாப்பிடாமல் அவர் சென்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ஐஇடி இருந்ததாகக் கூறப்படும் தனது பையை அவர் விட்டுச் சென்றார் என்று துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். . வெடித்தது மிக வீரியமிக்க IED வெடிகுண்டு என போலீசார் கூறுகின்றனர். தீவிர விசாரணை நடந்து வருகின்றது என்று துணை முதல்வர் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் காயமடைந்துள்ளனர்
பையில் இருந்ததைத் தவிர, வளாகத்தில் ஐஇடி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை முதலமைச்சரிடம் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications