கர்நாடகா ரிசார்ட்ஸ் ரெடி! டிகே சிவகுமார் "கேம்"ஆரம்பம்-5 மாநில காங். எம்எல்ஏக்களை பாதுகாக்க வியூகம்!
பெங்களூர்: தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ந் தேதி வெளியாகிறது. 5 மாநில தேர்தல்களில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜகவின் ஆபரேஷனில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கர்நாடகாவில் பாதுகாக்க இப்போதே அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் ரிசார்ட்டுகளை தயார் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1980களில் இருந்தே ரிசார்ட் அரசியல் பேசுபொருளாக இருந்து வருகிறது. சொந்த கட்சி எம்.எல்.ஏக்களை வளைக்கப் பார்க்கும் பிற கட்சிகளிடம் இருந்து அவர்களை பாதுகாத்து வைப்பதுதான் ரிசார்ட் அரசியல். 1983-ல் கர்நாடகாவில் ராமகிருஷ்ண ஹெக்டே அரசுக்கு சிக்கல் ஏற்பட்ட போது காங்கிரஸிடம் இருந்து ஜனதா கட்சி எம்.எல்.ஏக்களை பாதுகாக்க ரிசார்ட் அரசியல் கை கொடுத்தது. 1984-ல் ஆந்திராவில் அமெரிக்காவுக்கு சிகிச்சை என்.டி.ராமாராவ் போன போது தெலுங்குதேசம் கட்சியில் சிக்கல் எழுந்தது. அப்போது தெலுங்குதேசம் எம்.எல்.ஏக்களை என்.டி.ராமாராவ் தரப்பு, கர்நாடகாவுக்கு அனுப்பி பாதுகாத்தது. 1985-ல் சந்திரபாபு நாயுடு- என்.டி.ராமாராவ் மோதலில் ஹைதராபாத்துக்கு தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 2002-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தின் போது கர்நாடகாவுக்கு 71 எம்.எல்.ஏக்களை அனுப்பி வைத்து பாதுகாத்தது காங்கிரஸ்.

கூவத்தூர் ரிசார்ட்: 2011-ல் கர்நாடகாவில் எடியூரப்பா- சதானந்த கவுடா மோதலில் ரிசார்ட் அரசியலை கையில் எடுத்தார் எடியூரப்பா. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்திய போது சசிகலா, கூவத்தூர் ரிசார்ட் அரசியல் நடத்தி எடப்பாடி பழனிசாமியை முதல்வரக்கினார். கூவத்தூர் அரசியல் இந்தியா முழுவதும் பேசுபொருளானது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன், தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை புதுச்சேரி, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரிசார்ட் நாயகன் டிகே சிவகுமார்: 2017-ம் ஆண்டு குஜராத் ராஜ்யசபா தேர்தலின் போது கூட அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துவிடாமல் இருக்க கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் பாதுகாத்தவர் டிகே சிவகுமார். 2019-ல் கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ப்பின் போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது மும்பைக்கு போய் அதிருப்தி எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்து வர பெரும் யுத்தமே நடத்தினார் டிகே சிவகுமார். கடந்த மே மாதம் கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் நிலையில் தொங்கு சட்டசபை அமைந்தால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்க தமிழ்நாட்டின் மாமல்லபுரம் ரிசார்ட்டுகள் தயாராக இருந்தன.
குமாரசாமி அச்சம்: இவ்வளவு ஏன்? பாஜகவுடன் கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியை அறிவித்தது. இந்த கூட்டணிக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் மிரண்டு போன குமாரசாமி, தமது கட்சி எம்.எல்.ஏக்களை சில வாரங்களுக்கு முன்னர் கூட ரிசார்ட்டில் தங்க வைத்தார். இந்த பின்னணியில் தற்போதும் காங்கிரஸ் 'ரிசார்ட்' அரசியலில் கவனம் செலுத்துகிறது.
5 மாநில தேர்தல்கள்: தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கானா தவிர்த்து இதர மாநிலங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்துவிட்டன. தெலுங்கானாவில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. 5 மாநிலங்களில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் எந்த கட்சி வெல்லும் என்பதில் குழப்பமான கருத்துகள் நிலவுகின்றன. சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பது உறுதியாக நம்பிக்கையாக இருக்கிறது. மிசோரமில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்றாலும் ஆளும் மிசோ தேசிய முன்னணி அல்லது ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கக் கூடும் என்பதும் எதிர்பார்ப்பு.
தெலுங்கானா, மபி, ராஜஸ்தான் நிலைமை: தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளிடையே மிக கடுமையான போட்டி நிலவுகிறது. பிஆர்எஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியை அமைக்கக் கூடும் எனவும் காங்கிரஸ் இம்முறை நிச்சயம் வெல்லும் எனவும் முரண்பாடான கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. பொதுவாக பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே சொற்ப எண்ணிக்கையிலான இடங்களில்தான் வேறுபாடு இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதே நிலைமைதான் ம.பி, ராஜஸ்தானிலும் உருவாகக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கர்நாடகா ரிசார்ட்டுகள் ரெடி: ஆகையால் தெலுங்கானா, ம.பி., ராஜஸ்தான் மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் நூலிழையில் வென்றாலோ தோற்றாலோ அந்த எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிஆர்எஸ் அல்லது பாஜக கட்சிகள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போடவே முயற்சிக்கலாம். இதனால் இந்த மாநில தேர்தல் முடிவுகள் வரும் போது சிக்கல்கள் எழுந்தால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்க இப்போதே கர்நாடகா ரிசார்ட்டுகள் 'ஷேப் ஹவுஸ்களாக' மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கான நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார் 'ரிசார்ட் அரசியல் கதாநாயகன்' கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் என்கின்றன அம்மாநில அரசியல் வட்டாரங்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications