Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் "பறக்கும்" பஸ்கள்.. இனி டிராபிக் பிரச்சினை இருக்காது.! நிதின் கட்கரி மேஜர் தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவிலேயே அதிக டிராபிக் நெரிசல் உள்ள நகரமாகப் பெங்களூர் இருக்கிறது. இதற்கிடையே நகரில் அதிகரித்து வரும் டிராபிக் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் பெங்களூரில் வானில் பறக்கும் ஏர்பாட்களை கொண்டு வருவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகச் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் டிராபிக் தான் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பெங்களூரில் டிராபிக் உச்சத்தில் இருக்கிறது. இந்த டிராபிக் நெரிசலைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் முயன்று வருகிறது. இருப்பினும், இதற்குப் பெரியளவில் பலன் கிடைப்பதாக இல்லை.

Flying Buses for Bangalore Traffic Chaos Nitin Gadkari s Plan Revealed

பெங்களூர் டிராபிக்

இதற்கிடையே பெங்களூர் உட்பட இந்தியப் பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும், அதிநவீன போக்குவரத்து முறைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக உயர்த்தப்பட்ட ஏர்பாட் போன்ற அமைப்புகள் மற்றும் விரைவாக சார்ஜ் செய்யும் திறன் கொண்ட மின்சார பேருந்துகள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

பறக்கும் பஸ்கள்

இப்போது நமது மெட்ரோ எப்படி உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் செல்கிறதோ.. அதேபோலத் தான் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் இன்னுமே வேகமாக மக்களை அழைத்துச் செல்லும் போக்குவரத்து முறை தான் ஏர்பாட். வானில் பறக்கும் ஏர்பாட்கள் என்பது தானியங்கி மின்சார பேருந்துகள் ஆகும். இவை விமானங்கள் அல்ல. இவை உயரத்தில் அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் இயக்கப்படும் டிரைவர் இல்லாத எலக்டிரிக் பாட்கள். ஒவ்வொரு பாட்டிலும் 135 பயணிகள் பயணிக்கலாம். பெருநகரங்களில் டிராபிக் நெரிசலைக் குறைக்க மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தீவிரமாகவே பரிசீலனை செய்து வருகிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் அதேநேரம் காற்று மாசையும் கருத்தில் கொண்டு மாற்றுப் போக்குவரத்து ஆப்ஷன்கள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக நிதின் கட்கரி பிரபல ஆங்கில செய்தி சேனலான என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். இதற்காக பல்வேறு சர்வதேச நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் இதற்கான பைலட் திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதின் கட்கரி

இது குறித்து நிதின் கட்கரி மேலும் கூறுகையில், "மொத்தம் 360 திட்ட முன்மொழிவுகள் வந்துள்ளன. தற்போது பொதுப் போக்குவரத்து அமைப்பில், குறிப்பாக மின்சார போக்குவரத்து முறையில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். இதன் மூலம் காற்று மாசு இருக்காது. டெல்லி பகுதியில் நாங்கள் ஏற்கனவே பல திட்டங்களை உருவாக்கி வருகிறோம். இதற்கான முன்மொழிவுகளும் வந்துள்ளன.

நமது நாட்டில் மாசுபாடுகள் தான் முக்கியமான பிரச்சனை. நாம் 22 லட்சம் கோடி ரூபாய் புதை படிவ எரிபொருளை (கச்சா எண்ணெய் சார்ந்தவை) இறக்குமதி செய்கிறோம். இதைக் குறைக்க பொதுப் போக்குவரத்து தான் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியச் சமூகம் தற்போது பொதுப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வசதியான பயணத்தையே விரும்புகிறது. சொகுசு பேருந்துகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

குறைந்த கட்டணத்தில்

அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து பல தொழில்நுட்பங்கள் உள்ளன. ஏற்கனவே 13 தொழில்நுட்ப முன்மொழிவுகளைப் பெற்றுள்ளோம். ஆனால் அவை பொருளாதார ரீதியாகச் சாத்தியமானதாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த சேவைகளை நாங்கள் மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் வழங்க விரும்புகிறோம். பைலட் திட்டங்களைச் செயல்படுத்த எனது சொந்த தொகுதியான நாக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+