செல்போனில் இருந்த 13,000 ஆபாச போட்டோ! பெங்களூரை அதிரவைத்த பிபிஓ ஊழியர்! காதலி வைத்த செம ட்விஸ்ட்
பெங்களூர்: காதலி உள்பட உடன் பணி செய்யும் பிற பெண்களின் 13 ஆயிரம் ஆபாச போட்டோக்களை செல்போனில் வைத்திருந்த பிபிஓ ஊழியர் வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அந்த நபர் அவரது காதலியாலேயே போலீசில் சிக்க வைக்கப்பட்டது எப்படி? என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் பெல்லந்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிபிஓ அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்த அலுவலகத்தில் சமீபத்தில் ஆதித்ய சந்தோஷ் (வயது 25) என்பவர் பணிக்கு சேர்ந்தார். இவருக்கும் அந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் தான்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது
ஒரே அலுவலகத்தில் இருவரும் பணியாற்றி வருவதாக முதலில் நண்பர்களாக பழகினர். அதன்பிறகு இருவர் இடையேயான பழக்கம் என்பது அடுத்தக்கட்டத்துக்கு சென்றது. ஆதித்ய சந்தோஷ் மற்றும் தான்வி ஆகியோர் பரஸ்பரம் காதலிக்க தொடங்கி உள்ளனர். இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக அவர்கள் இந்த உறவில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் தான் இருவரும் சேர்ந்து இருப்பதை ஆதித்ய சந்தோஷ் தனது செல்போனில் போட்டோவாகவும், வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதனை அறிந்த தான்வி அதனை டெலிட் செய்ய கூறினார். ஆனால் ஆதித்ய சந்தோஷ் மறுத்துள்ளார். இதையடுத்து தான்வி ஆதித்ய சந்தோஷின் செல்போனை எடுத்த அந்த போட்டோ, வீடியோவை டெலிட் செய்ய திட்டமிட்டார்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு ஆதித்ய சந்தோஷின் செல்போனை அவருக்கு தெரியாமல் தான்வி எடுத்து பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி பேரதிர்ச்சியை கொடுத்தது. அதாவது ஆதித்ய சந்தோஷின் செல்போனில் 13 ஆயிரம் ஆபாச போட்டோக்கள் இருந்துள்ளன. தான்வி மற்றும் அவருடன் பணி செய்யும் பல பெண்களின் ஆபாச போட்டோக்கள் செல்போனில் இருந்ததை பார்த்து அவர் திடுக்கிட்டார்.
அப்போது தான் ஆதித்ய சந்தோஷ் நல்லவர் இல்லை என்பதை தான்யா அறிந்தார். இதையடுத்து அவர் தன்னையும், பிற பெண்களையும் ஆதித்ய சந்தோஷிடம் இருந்து காப்பாற்ற நினைத்தார். இதையடுத்து உடனடியாக அவர் தான் பணிபுரியும் அலுவலகத்தின் உயரதிகாரியிடம் புகாரளித்தார். இதையடுத்து அந்த அலுவலகத்தில் சட்டநிபுணர்கள் ஆலோசனையின் பேரில் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் ஆதித்ய சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications