பெங்களூர்லயே இருக்காதீங்க.. சொந்த ஊருக்கு கிளம்புங்க.. ஐ.டி ஊழியர்களை விரட்டும் தண்ணீர் தட்டுப்பாடு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர், தண்ணீர் தட்டுப்பாட்டின் உச்சத்தில் இருந்து வருகிறது. பெங்களூரில் பணியாறும் ஐடி பணியாளர்களை சொந்த ஊர்களுக்கே சென்று வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்தியாவின் டெக்னாலஜி ஹப்பான பெங்களூர் தற்போது தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்தது மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவு ஆகியவற்றால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற வறட்சி காலங்களில் தனியார் டேங்கர் லாரிகளை மக்கள் நாடுவார்கள். ஆனால் இந்த முறை தனியார் டேங்கர் உரிமையாளர்களே தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

Go home Water crisis leads bangalore to the edge

பெங்களூரில் 14,000 ஆழ்துளை கிணறுகளில் இருந்து, 4000 டேங்கர் லாரிகள் தண்ணீரை எடுத்து சப்ளை செய்கின்றன. ஆனால் இப்போது சுமார் 7000 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. எனவே மொத்த தண்ணீர் விநியோகத்தில் 50 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரி தண்ணீரின் விலையும் உயர்ந்திருக்கிறது. வழக்கமாக ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ. 1500 முதல் ரூ.2000 வரை விலை உயர்ந்திருக்கிறது.

விலையை கட்டுக்குள் வைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. விலை ஒரு பிரச்சனையாக இருந்தாலும் கூட, டேங்கர்களை புக் செய்தால் அவை வரவே பல நாட்கள் ஆவதாக பெங்களூர் குடியிருப்பு வாசிகள் புலம்பி வருகின்றனர். ஏராளமானோர் வாரத்திற்கு ஒரு முறை தான் குளித்து வருகிறார்களாம். வெயில் காலத்தில் இந்த பிரச்சனை உடல், மன நில சிக்கல்களையும் ஏற்படுத்தும் என கவலை தெரிவிக்கிறார்கள் பெங்களூர் வாசிகள்.

தனியார் டேங்கர் லாரிகள் மூலம் புறநகர்ப் பகுதிகளில் இருந்து தண்ணீரை எடுத்து வருகின்றனர். தண்ணீர் அதிகம் சுரக்கும் போர்வெல்கள் அடையாளம் காணப்பட்டு உரிய முறையில் நீரை பகிர்ந்தளிக்க பெங்களூர் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய போர்வெல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெங்களுருக்கு வந்து பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் பாடு பெரிய திண்டாட்டமாக மாறியுள்ளது.

அலுவலகங்களில் தண்ணீர் இல்லை. தனியார் டேங்கர் லாரிகள் மூலம் ஆர்டர் செய்தாலும் தண்ணீர் வருவதற்கு சில நாட்கள் ஆகிவிடுகிறது. இத்தகைய நிலையில் எப்படி அலுவலகம் சென்று வேலை பார்ப்பது? என்று திண்டாடி, பரிதவித்து வருகின்றனர். ஏராளமான ஐ.டி நிறுவனங்கள், தங்கள் ஊழியகளை வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனை வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோடைகாலம் ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருக்கும். ஆனால் தற்போதே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அடுத்தடுத்த மாதங்களில் நிலை என்னாகுமோ என பெங்களூர் வாழ் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இப்போதிருக்கும் மக்கள் அப்படியே அங்கேயே இருந்தால் அடுத்த 2 மாதங்கள் நிலைமை கடுமையாக மோசமாகலாம் எனக் கூறப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஏராளமான ஐடி ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்ப தயாராகி வருகின்றனர். டெக்னாலஜி ஹப்பான பெங்களூர் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் அதேசமயம், தண்ணீர் தட்டுப்பாடும் ஆண்டுக்கு ஆண்டு தீவிரமடைந்து வருவது மிகப்பெரிய தீர்வு காண வேண்டிய பிரச்சனையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+