அரசின் அலட்சியம்.. என் குடும்பத்தை அழித்துவிட்டதே.. பெங்களூர் மெட்ரோ விபத்து.. கதறிய கணவன்!
பெங்களூர்: பெங்களூர் மெட்ரோ தூண் சரிந்த பயங்கர விபத்தில் தனது மனைவியும், குழந்தையும் இறந்துவிட்டார்கள் என கேள்விப்பட்ட இளைஞர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
தனது மனைவியும், குழந்தையும் உயிரிழந்ததற்கு அரசின் அலட்சியமே காரணம் எனக் கூறியுள்ள அவர், மெட்ரோ பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் வரை மனைவி, குழந்தையின் உடலை எடுக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில், எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் பல அடி உயர ராட்சத தூணை நிறுத்தியிருந்தது பொதுமக்களையும் கொதிப்படைய செய்துள்ளது.

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
பெங்களூரில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து எச்ஆர்பிஆர் லே அவுட் பகுதி வரை மெட்ரோ ரயலுக்கான ராட்சத தூண்களை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை நாகவாரா என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த 40 அடி உயர இரும்பு தூண் திடீரென சரிந்து விழுந்தது.

துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்
அந்த சமயத்தில், அங்கு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த லோஹித் (32), அவரது மனைவி தேஜஸ்வினி (28), அவரது மகன் (2), மகள் வீனா (2) ஆகியோர் மீது அந்த தூண் விழுந்தது. இந்த கோர விபத்தில் 4 பேரும் படுகாயமடைந்தனர். இதில் தேஜஸ்வினியும், அவரது மகன் விஹனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். லோஹித்தும், மகள் வீனவும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கதறி அழுத இளைஞர்
இந்த விபத்து பெங்களூரில் பெரும் அதிர்வலைகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மக்களின் பாதுகாப்பை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்த மெட்ரோ தூண்கள் எழுப்பப்பட்டு வந்தது இந்த விபத்தின் மூலமே தெரியவந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த லோஹித் இன்று காலைதான் கண் விழித்தார். எழுந்த உடனேயே தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவர் தேடினார். அப்போது, அவரது மனைவியும், மகனும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு லோஹித் கதறி அழுதார்.

"உடல்களை வாங்க மாட்டேன்"
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது மனைவியும், மகனும் உயிரிழந்தது முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால்தான். மெட்ரோ ரயிலுக்கு இத்தனை பெரிய தூண்களை அமைக்கும் போது, அது சரிந்து விழாமல் இருக்க எந்த ஒரு பாதுகாப்பு நெறிமுறைகளையும் ஒப்பந்ததாரர் கடைப்பிடிக்கவில்லை. இதை அரசும் வேடிக்கை பார்த்துள்ளது. இன்று எனது மனைவியும், ஒன்றுமறியா குழந்தையும் அரசின் அலட்சியத்திற்கு இரையாகிவிட்டனர். சம்பந்தப்பட்ட மெட்ரோ ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் வரை என் மனைவி, குழந்தையின் உடலை வாங்க மாட்டேன். இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால்தான் எனக்கு ஏற்பட்ட கதி மற்றவர்களுக்கு ஏற்படாது" என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications