மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆ.ராசா.. விசிக, ஐயூஎம்எல் மீது கடுமையான வார்த்தைகளில் விமர்சனம்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் பரபரப்புகள் ஓயவில்லை. ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக எதிர்க்கட்சியாகிவிட்டது. திமுகவின் கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சியும் தவெக அமைச்சரவையில் இடம் பிடிக்கவுள்ளனர். இது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விசிக மற்றும் ஐயூஎம்எல் மீது திமுக மூத்த தலைவர் ராசா வைத்துள்ள விமர்சனம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜயுடன் 9பேர் அமைச்சராக பதவியேற்றனர். நேற்று மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளது. அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸை தொடர்ந்து விசிக, ஐயூஎம்எல் மீதும் திமுக விமர்சனம் வைக்க தொடங்கியுள்ளது.

ராசா சர்ச்சை விமர்சனம்
இதுகுறித்து திமுக துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ. ராசா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முன் 'ஏற' தரப்பட்ட 'ஏணியும்' மூட சாதியை நொறுக்க வேண்டிய 'சிறுத்தையும்' வெறும் 'விசில்' சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி - புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை!
பெரியாரின் 'காலதேச வர்த்தமான' த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!" என்று கூறியுள்ளார். ராசாவின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுகவினர் இதை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். அதேநேரத்தில் ராசா கடுமையான சொற்களால் விசிக, ஐயூஎம்எல் ஆகியோரை விமர்சித்துள்ளதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.
பலரும் எதிர்ப்பு
திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அதிகாரம் இழந்த வெறியில் இன்னும் இன்னும் ஆழமாக தனது அசலான அதிகாரவெறி கொண்ட அருவருப்பான தன்மையை நன்றாக பாருங்களேன் என்று தன்னை தானே தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இதுதான் சமூக நீதிக்கும், பெண்ணியத்திற்கும் கொடுக்கும் மரியாதையா என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications