‛சாவர்க்கருக்கு ஜே’.. பள்ளியில் மாணவர்களை கோஷமிட வைத்த தலைமையாசிரியை! வீடியோவால் மன்னிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் சுதந்திர தினத்தன்று மாணவர்களை ‛‛சாவர்கருக்கு ஜி-க்கு ஜே'' என மாணவர்கள் கோஷமிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இந்நிலையில் தான் கடந்த 15ம் தேதி அம்மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தான் சுதந்திர தினம் கொண்டாட்டத்தின்போது கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் அருகே மான்சி அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தான் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
அதாவது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பள்ளி மாணவர்கள் சரோஜினி நாயுடு, பிபின் சந்திர பாலந்த், வீர சாவர்க்கர் உள்ளிட்டவர்களை புகழ்ந்து கோஷமிட்டனர். சாவர்க்கர் ஜ-க்கு ஜே என மாணவர்கள் கோஷமிட்டுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தலின்பேரில் மாணவர்கள் கோஷமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதைடுத்து இந்த சம்பவம் விவாதத்தை கிளப்பி உள்ளது. மேலும் சாவர்காருக்கு ஆதரவாக கோஷமிட வலியுறுத்திய பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வேறு வழியின்றி பள்ளி நிர்வாகம் சார்பில் தலைமையாசிரியை விமலா மாணவர்களின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியானது. இதனால் அது வலைதளங்களிலும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் போலீஸ் நிலையம் சென்ற தலைமையாசிரியை புகார் ஒன்றையும் வழங்கினார். அதாவது அனுமதியின்றி பள்ளியில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
வீடியோ வெளியானதால் தான் இந்த சம்பவம் விவாதத்துக்கு உள்ளானதோடு, அவர் மன்னிப்பு கோரினார். இத்தகைய சூழலில் தான் வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் போலீசில் புகார் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சாவர்க்கர் சுதந்திர போராட்ட தியாகி என பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் உள்ளனர்.
இதனால் சமீபகாலமாக சாவர்க்கர் தொடர்பான விவாதம் என்பது பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே நடப்பது உண்டு. இத்தகைய சூழலில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் அரசு பள்ளியில் சுதந்திர தினத்தன்று சாவர்க்கருக்கு ஜே என மாணவர்கள் கோஷமிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications