அதிகம் சாப்பிடாதே.. 2 வயது குழந்தையின் வயிற்றில் குத்தி, சூடு வைத்த கொடூர பாட்டி.. பெங்களூரில் ஷாக்!
பெங்களூரு: பெங்களூரில் அதிகம் சாப்பிடாதே என பேரனை சூடு வைத்து கொடுமைப்படுத்திய பாட்டி மற்றும் சித்தியை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள குருனப்பல்பாலையா என்ற பகுதியை சேர்ந்தவர் இம்ரான்பாஷா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிரா. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன.
இந்த 5 குழந்தைகளில் 4ஆவது குழந்தை அர்மான் ஷெரீப் (2). இந்த குழந்தைக்கு இயல்பாகவே அதிக உணவு உண்ணும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் இவரது பாட்டி முபீனா குழந்தையை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.

குழந்தைக்கு சூடு
அதிகம் சாப்பிடாதே என கூறி குழந்தைக்கு சூடும் வைத்துள்ளார். இந்த வீடியோவை பார்ப்பதற்கே மனம் பதறுகிறது. 2 வயது குழந்தை என்றும் பாராமல் குழந்தையின் தலையில் ஓங்கி கொட்டுகிறார். பின்னர் முதுகில் பட்பட்டென அடிக்கிறார். கன்னத்தில் ஓங்கி அறை விடுகிறார். வயிற்றில் குத்துகிறார்.

பாட்டி
பாவம் அந்த குழந்தை அழுதப்படியே அந்த இடத்தை விட்டு நகராமல் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. மேலும் மெழுகுவர்த்தியை ஏற்றி அதில் இருந்து விழும் மெழுகை அந்த குழந்தையின் கைகளில் விடுகிறார் அந்த பாட்டி. குழந்தை அலறுகிறது.

வாட்ஸ் ஆப்
இவர் இவ்வாறு துன்புறுத்தியதால் குழந்தையின் கண், வாய், முகம் என அனைத்தும் காயமடைந்தும் வீங்கி காணப்படுகிறது. இந்த கொடுமைகளை அந்த குழந்தையின் சித்தி பாத்திமா வீடியோ எடுத்து தங்கள் உறவினர்களின் வாட்ஸ் ஆப் குழுவிற்கு அனுப்பியுள்ளார்.

கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளனர். மேலும் சிலர் அந்த வீடியோவை போலீஸுக்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் முபீனாவையும் அவரது கொடுமைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசித்த பாத்திமாவையும் கைது செய்தனர்.

5 குழந்தைகள்
இதையடுத்து பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தையை இந்த கொடூர ராட்சஷிகளின் பராமரிப்பில் விட்டுவிட்டு அவரது தாய், தந்தை என்னவானார்கள் என தெரியவில்லை. அந்த பாட்டியுடன் ஒரு சிறுமியும் இருந்தார். ஒருவேளை இம்ரானுக்கு 5 குழந்தைகள் என்பதால் கூலி தொழில் என்பதால் இரு குழந்தைகளை பாட்டி வீட்டில் வளர்க்க விட்டார்களா என தெரியவில்லை.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications