சட்டென்று மாறிய பெங்களூர் வானிலை.. இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி!
பெங்களூரில் திடீர் என்று பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் சந்தோசத்தில் இருக்கிறது.
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் திடீர் என்று பெய்த ஆலங்கட்டி மழையால் அங்கு மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.
இந்தியாவில் எப்போதும் குளிராக இருக்கும் நகரங்களில் ஒன்று பெங்களூர். எவ்வளவு வெயிலான வெப்பநிலை நிலவினாலும் பெங்களூரில் எப்போதும் குளிரான வானிலையே இருக்கும். தற்போது தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிக வெயில் அடித்து வருகிறது.

அதேபோல் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி எடுக்க தொடங்கி இருக்கிறது. இதனால் எப்போதும் குளிராக பெங்களூரிலும் கூட கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. கடந்த இரண்டு வாரமாக பெங்களுரில் கடுமையான வெயில் வாட்டி எடுத்தது.
சட்டென்று மாறிய பெங்களூர் வானிலை.. இடியோடு பெய்த திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி! #Bangalore #Weather #HailstoneRain pic.twitter.com/eI6Y71Ehkr
— Oneindia Tamil (@thatsTamil) April 17, 2019
ஆனால் தற்போது கோடை வெயிலை குறைத்து, குளிர்விக்கும் வகையில் பெங்களூரில் மழை பெய்து வருகிறது. அதுவும் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. பெங்களூரில் ஏப்ரலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பே வானிலை மையம் கூறி இருந்தது.
வடக்கு கர்நாடகா முதல் கன்னியாகுமரி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. தற்போது பெங்களூரில், சாந்தி நகர், ஜெயநகர், சில்க்போர்ட், கோரமங்களா, பிடிஎம், பன்சங்கரி உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது.
பெங்களூர் மட்டுமில்லாமல் கர்நாடகாவின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை காரணமாக மக்கள் தற்காலிகமாக வெயில் தொல்லையில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications