கர்நாடகா: ஹிஜாப் அணிய அனுமதிக்காததால் தேர்வை புறக்கணித்த மாணவி! விரட்டிப்போய் வீடியோ எடுத்த நபர்
பெங்களூர்: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவி ஒருவரை ரிப்போர்ட்டர் ஒருவர் துரத்தி துரத்தி வீடியோ எடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹிஜாப் பிரச்சனை கர்நாடகாவில் இன்னும் முடியாமல் தீவிரம் அடைந்து வருகிறது. கர்நாடகாவில் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகள் பியு கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற கல்வி நிறுவனங்களிலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணை முடியும் வரை எந்த வித மத அடையாளமும் இன்றி மாணவ, மாணவியர் வகுப்பிற்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணிந்து வந்தனர்
இந்த நிலையில் இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் பல்வேறு பள்ளிகளுக்கு நேற்று இஸ்லாமிய மாணவிகள் பலர் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இவர்களை அனுமதிக்கவில்லை. அரசு மற்றும் கோர்ட் உத்தரவுப்படி மத அடையாளங்களோடு வகுப்பிற்குள் வர கூடாது. இதனால் உங்களை அனுமதிக்க முடியாது என்று மாணவியருக்கு பள்ளி நிர்வாகம் வாசலிலேயே அறிவுறுத்தியது. இதனால் பல இஸ்லாமிய மாணவிகள் வகுப்பிற்கு செல்லாமல் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

ஹிஜாப் நீக்கம்
சில இஸ்லாமிய மாணவிகள் வேறு வழியில்லாமல் ஹிஜாப்பை நீக்கிவிட்டு பள்ளி வளாகத்திற்குள் சென்றனர். அதேபோல் பல பள்ளிகளில் இஸ்லாமிய ஆசிரியர்களும் ஹிஜாப்பை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பள்ளி வளாகத்திற்குள் செல்லும் முன் ஹிஜாப்பை நீக்கிவிட்டு அவர்கள் உள்ளே செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த வீடியோவும் இணையம் முழுக்க வெளியாகி நேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல பள்ளி மாணவிகள் ஹிஜாப்பை அகற்ற விருப்பம் இன்றி தனது பெற்றோர்களை திரும்பி திரும்பி பார்த்த கொடூரமும் நேற்று நடைபெற்றது.

வீடியோ
அங்கு இன்னும் பியு கல்லூரிகள் திறக்கப்படவில்லை. நாளைதான் அங்கு பியு கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் நாளை அங்கு பெரிய மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் இன்று ஷிமோகாவில் ஹிஜாப் அணிந்த மாணவி வகுப்பிற்குள் அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டார். பள்ளி தேர்வு நடந்து வரும் நிலையில் மதியம் தேர்வு எழுத அவர் ஹிஜாப்போடு வந்துள்ளார். ஆனால் அவரை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

தொல்லை
ஹிஜாப் கழற்றமாட்டேன் என்று சொல்லிவிட்டு தேர்வு எழுதாமல் சிறுமி திரும்பியுள்ளார். இன்னும் ஒரு மாணவியும் இதேபோல் திரும்பி சென்றுள்ளார். இந்த நிலையில் திரும்பி சென்ற அந்த மாணவியை ஓடி ஓடி ரிப்போர்ட்டர் ஒருவர் போனில் வீடியோ எடுத்துள்ளார். அவர் பின்னே துரத்தியபடி ஓடிச் சென்று முகம் தெரியும் அளவுக்கு கர்நாடக மாநில லோக்கல் ரிப்போர்ட்டர் வீடியோ எடுத்துள்ளார். தோற்றத்தை வைத்து பார்க்கும் போது அந்த மாணவி 5-7ம் வகுப்பு படிப்பவரை போல இருக்கிறார்.
Recommended Video

ரிப்போர்ட்டர் கேமரா
அவ்வளவு குறைந்த வயது கொண்ட இளம் சிறுமியை ரிப்போர்ட்டர் ஒருவர் இப்படி துரத்தி துரத்தி வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவியும் அஞ்சி நடுங்கி ஓடி உள்ளார். ஆனால் அப்போதும் இரக்கம் காட்டாமல் வீடியோ எடுக்க முயன்று அந்த மாணவியை மன ரீதியாக இந்த ரிப்போர்ட்டர் துன்புறுத்தி உள்ளார். இந்த சம்பவத்திற்கு இணையத்தில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம்












Click it and Unblock the Notifications