ஹிஜாப் பிரச்சனை தொடங்கியது எப்படி? நடந்தது என்ன? கர்நாடக அரசு ஹைகோர்ட்டில் பரபரப்பு வாதம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 1983ல் இருந்து கர்நாடக பியூ கல்லூரிகளில் யூனிபார்ம் விதிகள் உள்ளதாகவும், 2021 டிசம்பரில் சில மாணவிகள் திடீரென ஹிஜாப் அணிந்து வந்ததுதான் பிரச்சனைக்கு காரணம் என்று கர்நாடக அரசு தரப்பு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.

கர்நாடகாவில் பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணி இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வர கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணை முடியும் வரை மாணவ, மாணவியர் மத அடையாளங்களோடு வகுப்பிற்கு வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவிகள் தரப்பு

மாணவிகள் தரப்பு

இந்த வழக்கில் நேற்று வரை மாணவிகள் தரப்பு வாதங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மாணவிகளுக்கு சாதகமாக இரண்டு பொது நல வழக்குகள் விசாரணைக்கு வந்தது. ஆனால் அந்த மனுக்களில் குறை இருப்பதாக கூறி இரண்டு மனுக்களை திருப்பி அனுப்பி மீண்டும் பைல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து, அரசு தரப்பு வாதங்கள் வைக்கப்பட்டன. அரசு தரப்பு வழக்கறிஞர் பிரபுலிங் கே நவடாகி ஆஜர் ஆனார்.

அரசு வழக்கறிஞர்

அரசு வழக்கறிஞர்

அவர் வைத்த வாதத்தில், மொத்தம் 3 விஷயங்கள்தான் இந்த வழக்கில் சர்ச்சையாகி உள்ளது. அதாவது யூனிபார்ம் பற்றி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கல்லூரி கமிட்டிகளிடம் கொடுத்தது. இரண்டாவது ஹிஜாப் என்பது மத பழக்கங்களில் ஒன்று இல்லை என்று கூறியது. மூன்றாவது ஹிஜாப்பை அடிப்படை உரிமைகளில் ஒன்று இல்லை என்று கூறியது. ஆனால் உண்மையில் அரசு இதை பற்றி எந்த விதமான உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. ஹிஜாப் பற்றி அரசு பேசவே இல்லை.

யூனிபார்ம்

யூனிபார்ம்

யூனிபார்ம் என்பது பியு கல்லூரிகளில் பல வருடமாக இருக்கிறது. அங்கு 2013ல் இருந்தே உடுப்பியில் உள்ள பியு கல்லூரிகளில் யூனிபார்ம் விதிகள் உள்ளன. உடுப்பியில் உள்ள பியு கல்லூரியில் 2013லேயே யூனிபார்ம் விதி கொண்டு வந்து அங்கு மாணவ, மாணவியர் யூனிபார்ம் அணிந்து வந்தனர். 2021 டிசம்பர் வரை எந்த பிரச்சனையும் இல்லை. 2021 டிசம்பரில் சில மாணவிகள் திடீர் என்று ஹிஜாப் அணிந்து வந்தது பிரச்சனை ஆனது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

கடந்த 2021 டிசம்பர் 31ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்து தலைமை ஆசிரியரிடம் வகுப்பிற்கு செல்ல அனுமதி கேட்டனர். இந்த சம்பவம் நடந்ததும் கல்லூரி சிடிசி கமிட்டி கூடி ஆலோசனை செய்தது. ஜனவரி 1ம் தேதி இந்த ஆலோசனை செய்யப்பட்டது. அதில் 1985ல் இருந்தே பியு கல்லூரிகளில் யூனிபார்ம் பின்பற்றப்படுகிறது.

யூனிபார்ம் விதி

யூனிபார்ம் விதி

அதனால் யூனிபார்ம் விதிகளை மாணவிகள் கடைபிடிக்கட்டும். இதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டாம். ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இது பயன் அளிக்கவில்லை. இதன் பின் பிரச்சனை பெரிதானது. இதை பற்றி அரசுக்கு புகார் சென்றது. மற்ற பியு கல்லூரிகளிலும் இதே பிரச்சனை ஏற்பட்டது.

கமிட்டி

கமிட்டி

இதன் காரணமாக அரசு சார்பில் விசாரணை நடத்த உயர் மட்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இது மாநிலம் முழுக்க பிரச்சனையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 5ம் தேதி மாணவ, மாணவியர் எல்லோரும் யூனிபார்ம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு ஹிஜாப்பிற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எங்கள் உத்தரவு இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிரானது இல்லை.

ஹிஜாப் எதிர்ப்பு

ஹிஜாப் எதிர்ப்பு

ஹிஜாப்பை அரசு உத்தரவில் எங்கும் எதிர்க்கவில்லை. அரசு உத்தரவில் கல்லூரி கமிட்டி சொல்லும் யுனிபார்மை அணிய வேண்டும் என்றுதான் கூறி இருக்கிறோம். அரசு உத்தரவை 10 முறை படித்து பார்த்தால் கூட அதில் ஹிஜாப்பிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட இல்லை. நாங்கள் சொல்வது எல்லாமே கல்லூரி கமிட்டி சொல்லும் யுனிபார்மை அணியுங்கள் என்பதுதான் என்று அரசு தரப்பு வாதம் வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+