கை மீறி செல்கிறதா ஹிஜாப் விவகாரம்?.. தேசியக் கொடியை இறக்கிவிட்டு, காவி கொடி ஏற்றிய மாணவனால் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள சிவமோகாவில் ஒரு கல்லூரியில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு காவிக் கொடியை மாணவர் ஒருவர் கட்டிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முஸ்லீம் மாணவிகள் தலையில் ஸ்கார்ப் போல் அணிந்து கொள்ளும் ஹிஜாப்பை அணிய கர்நாடகாவில் ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிக்மக்ளூர், சிவமோகா, மங்களூர், உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து முஸ்லீம் மாணவிகளை கல்லூரிக்குள் சேர்க்காத அவலம் நடைபெறுகிறது.

ஹிஜாப் அணிந்த மாணவிகள்
மேலும் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்தால் நாங்கள் காவி துண்டு அணிவோம் என கூறி இந்து மாணவர்கள், மாணவிகள், கழுத்தில் காவி துண்டை அணிந்து வருகிறார்கள். நேற்று வரை நண்பர்களாக பழகி வந்த இந்த மாணவர்கள் மனதில் திடீரென இந்த மத பாகுபாடு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

144 தடையுத்தரவு
சிவமோகாவில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சிவமோகாவில் ஒரு கல்லூரியில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றிவிட்டு காவி கொடியை மாணவர் ஒருவர் ஏற்றியதால் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

தேசிய கொடி அகற்றம்
கீழே நிற்கும் மாணவர்கள் காவிக் கொடி கட்டும் மாணவனை ஆரவாரம் செய்கிறார்கள். கொடியை கட்டி முடித்தவுடன் கீழே இருந்த மாணவர்கள், தாங்கள் வைத்திருந்த காவிக் கொடியை ஏந்துகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில் கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் நிலைமை மோசமடைகிறது.

கற்கள் வீச்சு
விவகாரம் கை மீறி செல்கிறது என்பதற்கு உதாரணம்தான் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவி கொடி கட்டியது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கல்வி நிறுவனங்களை ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிட வேண்டும். ஆன்லைனில் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்றார். பகல்காட்டில் போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால் அதை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தால் போராட்ட களத்தில் வன்முறை ஏற்பட்டது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications