கர்நாடகா தேர்தல்: பாஜகவுக்கு நெருக்கடி தரும் ஸ்ரீராம் சேனா.. 25 தொகுதிகளில் சுயேட்சையாக போட்டி!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் இந்துத்துவா அமைப்புகளில் ஒன்றான ஸ்ரீராம் சேனா தனித்து சுயேட்டையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநில சட்டசபைக்கான தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தீவிரம் காட்டுகிறது. தென்னிந்தியாவில் பாஜக, ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும்தான். தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கான சாத்தியங்கள் இல்லை.

கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துதான் பாஜகவால் ஆட்சியில் அமரவும் முடிந்தது. இம்முறை எப்படியாவது பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியை தக்க வைக்க நினைக்கிறது பாஜக. அதேநேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் பெற்ற வெற்றியை கர்நாடகாவிலும் வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறது காங்கிரஸ்.அதுவும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகி உள்ளார். அதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் வெல்ல வேண்டும் என தீவிரம் காட்டுகிறார் கார்கே. அதேபோல் இம்முறையாவது கணிசமான இடங்களைப் பெற்று கிங் மேக்கர் என்பதை தக்க வைக்க ஜேடிஎஸ்-ம் முயற்சிக்கிறது.
இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்க செய்ய ஆம் ஆத்மி கட்சி 60 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட இந்திய மாநிலங்களில் பாஜகவை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டது ஆம் ஆத்மி. ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிகளுக்குதான் குழி பறித்தனர்; இதனால் பாஜக எளிதாகவும் வென்றது. அதே பார்முலாவைத்தான் கர்நாடகாவில் செயல்படுத்த நினைக்கிறது ஆம் ஆத்மி.
இந்நிலையில் பாஜகவுக்கு நெருக்கடி தரும் வகையில் இந்துத்துவா அமைப்புகளில் ஒன்றான ஸ்ரீராம் சேனா, கர்நாடகா தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. மொத்தம் 25 தொகுதிகளில் தனித்து சுயேட்சைகளாக தங்களது அமைப்பினர் போட்டியிடுவர் என பிரமோத் முத்தலிக் அறிவித்துள்ளார். அத்துடன் Karkala தொகுதியில் தாம் போட்டியிடப் போவதால் பாஜகவில் போட்டியிட விரும்புகிறவர்கள் வேறு ஒரு தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறியிருக்கிறார் முத்தலிக்.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவை 113 இடங்கள். 2018-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜக 104, காங்கிரஸ் 80, ஜேடிஎஸ் 37 இடங்களைப் பெற்றன. பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்றாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் அதாவது 113 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியிடம் இல்லை. ஆனால் பாஜகவின் எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். இருப்பினும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா பதவி விலகினார்.
இதனையடுத்து ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை உருவாக்கியது. ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி முதல்வரானார். இந்த ஆட்சியை பாஜக விட்டுவைக்கவில்லை. ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சியின் 16 எம்.எல்.ஏக்களை வளைத்தது பாஜக. அந்த எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு மகாராஷ்டிரா போனது. 16 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். ஜேடிஎஸ்- காங். கூட்டணியை ஆட்சியை தக்க வைக்க பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் குமாரசாமி அரசு தப்பிக்கவில்லை. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்றது. இதன்பினன்ரே எடியூரப்பா மீண்டும் முதல்வராக்கப்பட்டார். அவரும் 2 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். அவரால் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் எடியூரப்பா பதவி விலகினார்.












Click it and Unblock the Notifications