இன்னும் தொடரும் ஆணவக் கொலை.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொன்று கால்வாயில் வீசிய பெற்றோர்..
Recommended Video

பெங்களூர்: மாற்று சாதி இளைஞரை மகள் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர், மகள் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கொன்று கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுக்கா எல்லேமாலா கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (30). இவர் கேவிஎம் தொட்டியைச் சேர்ந்த ஜோதியை (25) காதலித்து வந்தார்.
இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் ஜோதியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து முத்துராஜ் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் ஜோதியின் குடும்பத்தினர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஜோதி, முத்துராஜை காதலித்து வந்தார்.

14-ஆம் தேதி
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜோதி வீட்டை விட்டு வெளியே வந்து முத்துராஜை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் வசித்து வந்தார். ஜோதி கர்ப்பமான நிலையில் இருவரும் கடந்த 14-ஆம் தேதி எல்லேமாலா கிராமத்திற்கு வந்தனர்.

ஜோதி தனியாக இருந்தார்
அப்போது முத்துராஜும், அவரது பெற்றோரும் வெளியே சென்றிருந்தனர். இதையடுத்து ஜோதி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோர் கிருஷ்ணய்யா, வெங்கட லட்சுமம்மா, தாத்தா கோவிந்தய்யா, பாட்டி திருமம்மா, ஜோதியின் மாமா கைவாஸ் ஆகியோர் முத்துராஜின் வீட்டுக்கு சென்று ஜோதியிடம் தகராறு செய்தனர்.

கால்வாயில் உடலை வீசிய கொடூரம்
பின்னர் அவரை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து காரில் கடத்தி சென்றனர். ஜோதியை கொள்ளேகால் தாலுக்கா சிவனசமுத்திரா பகுதியில் ஓடும் கால்வாய் அருகே அழைத்து சென்றதுடன் அவரது கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துவிட்டனர். பின்னர் அவரது உடலை கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.

தலைமறைவு
தகவலறிந்த போலீஸார் ஜோதியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் தேடி வருகிறார்கள். கர்ப்பிணி என்றும் பாராமல் பெற்ற மகளை கொலை செய்ய இந்த பெற்றோருக்கு எப்படிதான் மனம் வந்ததோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications