வாடகைக்கு வீடுகள்.. "ஒரிஜினல்" பத்திரத்தை பார்த்துட்டு ஆடிப்போன பெங்களூர் ஹவுஸ் ஓனர்கள்.. என்னாச்சு?
பெங்களூர்: பெங்களூர், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் வாடகைக்கு வீடு தேடுவோர் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.. நேற்று ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்து, ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இதுகுறித்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா செய்தியாளர்களுக்கு முக்கிய பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் ஐ.டி. கம்பெனிகள், ஷாப்பிங் மால்கள், கல்லூரிகள், பல்கலை.கள் பெருகி கொண்டிருக்கின்றன.. எனவே, இதுபோன்ற தேவைகளுக்கு அந்தந்த பகுதிகளில், வாடகைக்கு வீடு தேடுவோர்களை குறிவைத்து ஒரு கும்பல் இயங்கி வருவதாக போலீசார் அலர்ட் செய்தவாறே உள்ளனர்.

சென்னை புறநகரில், அதாவது, பல்லாவரம், தாம்பரம், சிட்லப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், பகுதிகளில், வீடு வாடகைக்கு உள்ளதாக சொல்லி, ஆன்லைனில், "அட்வான்ஸ் கமிஷன்" தொகையை வாங்கி கொள்கிறார்களாம்..
சென்னையின் புறநகர் பகுதிகள்
இதற்காகவே சில புரோக்கர்கள், கவர்ச்சிகரமான விளம்பரத்தையும் ஆன்லைனில் செய்துவிடுவதால், அவசரத்துக்கு வாடகைக்கு வீடு தேடுவோர், புரோக்கர்கள் கேட்கும் அட்வான்ஸ் பணத்தை ஆன்லைனில் செலுத்தி விட நேரிடுகிறது. பிறகு, அந்த வீட்டை நேரில் பார்க்க சென்றால், அப்படியொரு வீடே அந்த ஏரியாக்களில் இருப்பதில்லையாம்.. எனவே, வாடகைக்கு வீடு தேடுவோர் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறையும், சமூகநல ஆர்வலர்களும் பொதுமக்களை கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
சென்னையை போலவே பெங்களூரிலும் வாடகை மோசடிகள் பெருகி வருகின்றன.. வாடகைக்கு வீடு வாங்கி தருவதாக சொல்லி, பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
வாடகை வீடு - உரிமைதாரர்கள்
அதில், "வாடகை, லீசுக்கு வீடு வாங்கி தருவதாக கூறி, ஒரு கும்பல் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்தது. இதுதொடர்பாக ராமமூர்த்திநகர், ராஜனுகுண்டே, தேவனஹள்ளி, கொத்தனுார் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் ஏகப்பட்ட புகார்கள் பதிவாகி இருந்தன. இந்த வழக்கு CCP பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், மோசடியில் ஈடுபட்ட கலீல் ஷெரீப், 45 என்பவரை சிசிபி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவரும், கூட்டாளியான சையத் அகமது உசேனும் சேர்ந்து, "டான்சானைட் ரியால்டி இந்தியா" என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
வாடகை வசூல் தொகை
பிறகு, அங்குள்ள வீட்டு ஹவுஸ்ஓனர்களிடம் சென்று, வாடகைக்கு நாங்கள் ஆள் பிடித்து தருகிறோம், வாடகையை நாங்களே உங்களுக்கு வசூலித்து தந்துவிடுகிறோம் என்று சொல்லிவிடுவார்கள். வாடகை வந்தால் போதும் என்று நினைக்கிற ஹவுஸ்ஓனர்களும் இதற்கு சம்மதம் சொல்வார்கள்.
இதையடுத்து, ஆன்லைனில் வீடு தேடி, செல்போன் நம்பரை பதிவிடுவோர்களை கலீல் உசேன், சையது அகமது இருவரும் குறி வைப்பார்கள்.. முதலில் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் நம்பருக்கு அழைத்து பேசி, தங்களை ஹவுஸ் ஓனர்கள் என்று அறிமுகம் செய்து கொள்வார்கள்.. பிறகு, வாடகைக்கு வீடு தேடுவோரை நேரில் அழைத்து சென்று, வீட்டை காட்டுவார்கள். அவர்களுக்கு வீடு பிடித்துவிட்டால், வாடகை அல்லது குத்தகைக்கு குடியிருக்கும், பத்திரத்தை தயார் செய்து பணத்தை பெற்று கொள்வார்கள்.
ஆடிப்போன நிஜமான ஹவுஸ் ஓனர்கள்
ஆனால், வீட்டில் குடியேறுவோரிடம் வாங்கிய பணத்தை, வீடுகளின் நிஜமான உரிமையாளர்களிடம் தரமாட்டார்களாம்.. ஒருகட்டத்தில் தங்களுக்கு வாடகை வரவில்லை என்பதை அறிந்த நிஜமான ஹவுஸ்ஓனர்கள், தங்கள் வீடுகளுக்கு நேரடியாகவே சென்று, வாடகைக்கு குடியிருப்போர்களிடம் வாடகை கேட்பார்கள்.. அப்போதுதான், அங்கு குடியிருப்பவர்கள், ஏற்கனவே கலீல் ஷெரீப், சையத் அகமது உசேனிடம் வாடகையை தந்துவிட்டதாக சொல்லி உள்ளனர்.
அப்போது தான் இருவரும் சேர்ந்து வீட்டு உரிமையாளர், வாடகைதாரர்களை ஏமாற்றி வந்தது தெரிந்து, போலீசுக்கு வந்தார்கள்.. இப்போது, தலைமறைவாக உள்ள சையத் அகமது உசேனை தேடி வருகிறோம்.. கைதானவரிடம விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications