"மது மயக்கம்.!" கிச்சன் டூ பாத்ரூம் வரை.. எல்லா பக்கமும் சரக்கு பாட்டில்! பெங்களூரில் புலம்பும் ஓனர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் வீட்டை வாடகைக்குப் பிடிப்பது எந்தளவுக்குக் கஷ்டம் என அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அங்கே பேட்சுலருக்கு வீட்டை வாடகை விட்ட ஒருவர் புலம்பிய புலம்பல் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நமது நாட்டின் ஐடி தலைநகராக இருக்கும் நகரம் என்றால் அது பெங்களூர் தான். இப்போது நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகவும் ஸ்டார்ட்அப் மையமாக இருப்பது பெங்களூர் நகரம்.

இப்படி படுவேகமாக வளரும் பெங்களூர் நகரில் வீட்டை வாடகைக்குப் பிடிப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும்.. பெங்களூரில் நீங்கள் வீடு வாடகைக்குத் தேடிச் சென்றிருந்தால், அங்கு எத்தனை கண்டிஷன்கள் போடுகிறார்கள் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

 How a Educated Bachelor Leaves Flat Uninhabitable Bengaluru Landlord’s Worst Nightmare

பெங்களூர்: அங்கே அதிக வீட்டு வாடகை ஒரு பக்கம் என்றால் ஓனர்கள் போடும் நியாயமற்ற கண்டிஷன்கள் மறுபுறம் நம்மைக் கடுப்பேற்றும். சமூக வலைத்தளங்களில் பலரும் இது குறித்து எழுதி வருகிறார்கள். அதையெல்லாம் படித்தால் நிஜமாகவே இதற்கெல்லாம் வீட்டை மறுப்பார்களா.. அல்லது இதுபோன்ற கண்டிஷன்கள கூட போடுவார்களா என்றே நமக்கு எண்ணத் தோன்றும். சிலர் ஐஐடி தேர்வுகளைக் கூட ஈஸியாக எழுதிவிடலாம் போலப் பெங்களூரில் பேட்சுலர்களுக்கு வாடகைக்கு வீட்டைப் பிடிப்பது கடினம் என்பார்கள்

அதேநேரம் பேட்சுலர்களுக்கு வீட்டைத் தர உரிமையாளர்கள் தயங்கக் காரணம் இல்லாமலும் இல்லை. பேட்சுலர்களிடம் வீட்டைக் கொடுத்தால் வீட்டை முறையாகப் பராமரிக்க மாட்டார்கள் என்பதே அவர்களின் கவலை. அதனிடையே அப்படியொரு சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூரில் உள்ள பிளாட் உரிமையாளர் ஒருவர், பேட்சுலர்களுக்கு ரூமை கொடுத்ததால் எதிர்கொண்டு சிரமம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

 How a Educated Bachelor Leaves Flat Uninhabitable Bengaluru Landlord’s Worst Nightmare

மிக மோசம்: அந்த பேட்சுலர் தனது வீட்டை வாழ முடியாத அளவுக்கு மோசமானதாக மாற்றிவிட்டதாகவும் இதைச் சரி செய்யவே பெருந்தொகை செலவு செய்ய வேண்டும் என்று புலம்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் ரேட்டிட் பக்கத்தில், "பெங்களூர் மாரத்தஹள்ளியில் உள்ள எனது 2bhk பிளாட்டை நன்கு படித்த இளைஞருக்கு வாடகைக்குக் கொடுத்தேன். அவர் அவுட்டர் ரிங் ரோட்டில் இருக்கும் பெரிய MNC நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

டெபாசிட் தொகை: அவரது நிலைமையைப் புரிந்து கொண்டு அவர் கட்ட வேண்டிய வாடகையில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து கொண்டு மீதி தொகையை அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆனால், அதன் பின்னர் சில காலம் ஆகியும் அவர் வீட்டின் சாவியை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் எனக்குச் சந்தேகம் வந்தது. தொடர்ந்து தாமதம் செய்ததால் நான் வீட்டை நேரடியாகச் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.

 How a Educated Bachelor Leaves Flat Uninhabitable Bengaluru Landlord’s Worst Nightmare

அந்த இளைஞர் ஜன்னல்களைக் கூட மூடாமல் வீட்டை விட்டுக் கிளம்பியுள்ளார். பல நாட்களாக வீடு அப்படியே இருந்துள்ளது. அருகே உள்ளவர்களுக்கு இது குறித்து சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், வீட்டிற்கு நிறைய பேர் வந்து போவார்கள். இரவு மணி வரை பார்ட்டி டான்ஸ் என இருக்கும் என்று மட்டும் சொன்னார்கள்.. உள்ளே சென்று பார்த்த போது எனக்குப் பெரிய அதிர்ச்சி. பாத்ரூம், கிச்சன் என எல்லா இடங்களிலும் மது பாட்டில்கள் தான் இருந்தது.

ரொம்ப மோசம்: நிச்சயம் அவரது டெபாசிட் தொகையை நான் திரும்பத் தரப் போவதில்லை. வாழ முடியாத அளவுக்கு வீட்டை மோசமான நிலைக்கு விட்டுச் சென்றுள்ளார். அவரது தகவல்கள் அனைத்தும் சட்டப்படி உள்ளூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ளேன். அந்த நபர் எனது நம்பரையும் பிளாக் செய்துவிட்டார். அவ்வப்போது அன்பிளாக் செய்து என்ன திட்டிவிட்டு பிளாக் செய்துவிடுவார். இதன் காரணமாகவே பேட்சுலர்களுக்கு யாரும் வீட்டைத் தருவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

 How a Educated Bachelor Leaves Flat Uninhabitable Bengaluru Landlord’s Worst Nightmare

அந்த பிளாட்டின் படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதன் காரணமாகவே பேட்சுலர்களுக்கு ரூம் தர யோசிப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் பேட்சுலர்களுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இது அரிதிலும் அரிதான வழக்கு என்றும் பல பேட்சுலர்கள் தங்கள் வீடுகளைச் சுத்தமாகவே வைத்துக் கொண்டு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர்.

வாடகை 17 ஆயிரம் ரூபாய் என்றும் டெபாசிட் 85 ஆயிரம் என்றும் பேசி முடிவு செய்தோம். அந்த இளைஞர் முதல் 3-4 மாதங்கள் முறையாக வாடகை செலுத்தினார். ஆனால், வாடகை செலுத்தி சில மாதங்களில் காணாமல் போனார். ஒரு நாள் திடீரென தொடர்பு கொண்டு ஒரு எமர்ஜென்சி காரணமாக வீட்டை காலி செய்ய வேண்டிய சூழல் உருவானதாகவும் உடனடியாக டெபாசிட் தொகையைத் திரும்ப வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+