அம்மா மட்டும் போன் பண்ணலன்னா.. ஆபத்தில் சிக்கியிருப்பேன்! பெங்களூர் குண்டுவெடிப்பில் தப்பிய இளைஞர்
பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடித்து 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், சரியாக குண்டுவெடிக்கும் நேரத்தில் அம்மா போன் செய்ததால் வெளியே வந்ததாலும், ஒரு நொடி தாமதம் செய்திருந்தாலும் பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பேன் என்று குண்டுவெடிப்பில் தப்பிய இளைஞர் பேட்டியளித்துள்ளார்.
கர்நாடக மாநில தலைநர் பெங்களூரில் உள்ள பிரபலமான உணவகங்களில் ஒன்று ராமேஸ்வரம் கஃபே. பெங்களூரில் பல்வேறு கிளைகளுடன் இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூர் ஒயிட் பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று நண்பகல் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. முதலில் சிலிண்டர் வெடித்ததாக தகவல் பரவிய நிலையில், சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடித்ததை போலீசார் உறுதி செய்தனர்.

வெடிகுண்டு வெடித்தததில் ஹோட்டல் ஒரு நிமிடம் அதிர்ந்தது. பயங்கர சத்தமும் கேட்டதால் அப்பகுதி முழுவதும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தது. இந்த குண்டு வெடிப்பில் உணவக ஊழியர்கள் உள்பட 9 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உணவகத்தில் கை கழுவும் பகுதி அருகே வெடிகுண்டு வைக்கப்பட்ட பையை ஒருவர் வைத்து சென்றதாக உணவக உரிமையாளர் கூறினார்.
உணவகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சந்தேக நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, முகக் கவசமும் தொப்பியும் அணிந்தபடி, பேருந்தில் வந்த ஒரு நபர் டைமர் பயன்படுத்தி வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இந்தக் குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்.
குற்றவாளியை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்" என்று தெரிவித்துள்ளார். பெங்களூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபருடன் வந்தவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே, குண்டு வெடிப்பு நடைபெற்ற நேரத்தில் ஹோட்டலில் உணவு அருந்திக்கொண்டு இருந்த குமார் அலன்கிரிடி என்ற இளைஞர், போன் பேச வெளியே வந்ததால் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதாக கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
அம்மா தான் கடவுள் என்பது நேற்று மீண்டும் ஒருமுறை எனக்கு நிருபணம் ஆனது. நேற்று மதியம் உணவு அருந்துவதற்காக உணவகத்திற்கு சென்று இருந்தேன். தோசை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த போது, எனது அம்மாவிடம் இருந்து போன் வந்தது. போன் பேசுவதற்காக ஓட்டலில் இருந்து சில அடி வெளியே வந்தேன். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் சில நொடிகள் எனது காது உணர்வற்று போனது. அனைவரும் ஹோட்டலில் இருந்து வெளியே ஓட தொடங்கினரர்" என்றார்.
-
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை என்றால் சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? உடையும் ஓட்டு? இன்று 12 மணிக்கு என்னாகுமோ -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications