15 பாயிண்ட்.. கர்நாடகாவை பாஜக இழந்தது எப்படி? இதுதான் முக்கியமே.. புஷ்வானமான மோடி, அமித்ஷா வியூகம்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. மாறாக பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் தான் பிரதமர் மோடி, அமித்ஷாவின் பிரசார வியூகங்கள் சுத்தமாக எடுபடாத நிலையில் பாஜக தோல்விக்கான முக்கிய 15 காரணங்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒகே கட்டமாக கடந்த 10ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 65 இடங்களிலும், ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடித்துள்ளது. மாறாக பாஜக படுதோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்ததற்கு முக்கிய 20 காரணங்கள் உள்ளன. இதனை சிம்பிளாக புரியும்படி இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
முதல் பாயிண்ட்: அதீத நம்பிக்கை. அதாவது இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது. காங்கிரஸ் செல்வாக்கை இழக்கிறது. இதனால் எளிதாக வெற்றி பெற்றுவிடுவோம் என நம்பியது பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.
2வது பாயிண்ட்: பாஜக மேலிட தலைவர்களான பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டர்வர்களை அதிகமாக நம்பியது.

3வது பாயிண்ட்: கர்நாடகாவில் பாஜக நடத்திய ரதயாத்திரை முற்றிலுமாக தோல்வியில் முடிந்துள்ளது. தலைவர்கள் முறையான அர்ப்பணிப்பு இன்றி இதில் ஈடுபட்டதால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
4வது பாயிண்ட்: அமித்ஷாவின் தேர்தல் வியூகம் எடுபடவில்லை. வடஇந்தியாவை போன்றே இங்கேயும் வியூகம் வகுத்தது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
5வது பாயிண்ட்: மாநில அரசின் மீதான அதிகப்படியான புகார்கள் மக்கள் மத்தியில் நெகட்டிவ் அலையை ஏற்படுத்தியது. இதனை மாநில தலைவர்கள் சரிசெய்ய முயலாதது இப்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
6வது பாயிண்ட்: 20 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்தது. மாறாக 75 பேருக்கு புதிதாக போட்டியிட வாய்ப்பு வழங்கியது உள்ளிட்டவை பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
7 வது பாயிண்ட்: கர்நாடகாவில் பாஜகவின் முகமாக உள்ள எடியூரப்பாவை மேலிடம் ஓரம்கட்டியது. இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
8வது பாயிண்ட்: ஜெகதீஷ் ெஷட்டர், லட்சுமண் சவதி உள்ளிட்ட லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த சீனியர் தலைவர்களை புறக்கணித்தது. மேலும் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது வடகர்நாடகா மாவட்டங்களில் பாஜகவுக்கு சறுக்கலை கொடுத்துள்ளது.
9வது பாயிண்ட்: வீரசைவ லிங்காயத் பிரிவில் பிளவை ஏற்படுத்தியது பேக்பயர் ஆகியுள்ளது.

10வது பாயிண்ட்: மாநில தலைவர்கள் கூறும் விஷயங்களை கட்சி மேலிட தலைவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் மாநில தலைவர்கள், மேலிட தலைவர்கள் இடையேயான உரையாடல் குறைந்து பாஜக சறுக்கலை சந்தித்துள்ளது.
11வது பாயிண்ட்: 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு, விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது உள்ளிட்டவை மக்கள் மத்தியில் எதிரொலித்துள்ளது.
12வது பாயிண்ட்: ஓல்டு மைசூர் மாவட்டங்களில் உள்ள ஒக்கலிக்கர் சமுதாய மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் இன்னும் பாஜக இருப்பது இந்த தேர்தலில் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.'
13வது பாயிண்ட்: தேர்தலை கருத்தில் கொண்டு ஒக்கலிகர், லிங்காயத் மக்களுக்கு கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு மற்றும் எஸ்டி, எஸ்டி மக்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு சுத்தமாக பலன் கொடுக்கவில்லை.
14வது பாயிண்ட்: முதல்வர் பசவராஜ் பொம்மை அரசின் நிர்வாக குறைபாடு மற்றும் பசவராஜ் பொம்மையின் தலைமை பண்பில் இருந்த குறைபாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
15வது பாயிண்ட்: அமைச்சர்கள் முறையாக செயல்படாதது, கமிஷன், பிஎஸ்ஐ ஊழல், பிட்காயின் ஊழல், போதைப்பொருள் வழக்கு உள்பட பல விஷயங்களை எதிர்கொண்டது மக்கள் மத்தியில் பாஜக மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது.
இந்த 15 பாயிண்ட்டுகளால் தான் கர்நாடகாவில் பாஜக மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications