50% வரை அதிகரித்த காலரா பரவல்.. பெங்களூர் மக்களே தப்பிப்பது எப்படி? இந்த 6 ‛ஸ்டெப்’ போதும்
பெங்களூர்: பெங்களூரில் காலரா பரவல் திடீரென்று 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் பொதுமக்கள் காலரா நோயில் இருந்து பாதுகாப்பாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள் வருமாறு:
காலரா என்பது ஒரு தீவிரமாக நோயாகும். விப்ரியோ காலரா என்ற நச்சு பாக்டீரியாவாலில் குடலில் தொற்று உருவாகி காலரா பாதிப்பு ஏற்படும். அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற உணவகளை எடுத்து கொள்வது தான் காலரா பாதிப்புக்கு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் காலரா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது 50 சதவீதம் வரை அதிகரித்து தினமும் 20 பேர் வரை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காலரா தடுப்பு குறித்த பணியை பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது.
பொதுவாக காலரா என்பது மழைக்காலத்தில் தான் அதிகம் பரவும். ஆனால் பெங்களூரில் தற்போது வெயில் அதிகமாக உள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் காலரா பாதிப்பு கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது தண்ணீர் பிரச்சனையால் வெளியிடங்களில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்தப்படும் தண்ணீரால் காலரா பரவல் அதிகரிக்கலாம் என மருத்துவ துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் காலரா ஏற்பட்டதால் அதற்கு வயிற்றுப்போக்கு தான் முதல் அறிகுறியாக இருக்கும். அதன்பிறகு தசைப்பிடிப்பு, காய்ச்சல், மயக்கம், ரத்த அழுத்தம் குறைவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். மேலம் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு சருமம் வறண்டு போகலாம். தோல்களில் சுருக்கங்கள் ஏற்படலாம். காலரா என்பது ஒரு தீவிரமாக நோயாகும்.
இதனால் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது. ஏனென்றால் உலகில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 4 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) மக்கள் காலராவால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 21 ஆயிரம் முதல் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கிறார்கள். மேலும் காலரா நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க நாம் 6 வழிமுறைகளை சாதாரணமாக வீட்டில் இருந்தே பின்பற்றினால் போதும். காலரா நம்மை நெருங்காது. அந்த 6 வழிமுறைகள் வருமாறு:
* சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடிக்க வேண்டும். அல்லது தண்ணீரை கொதிக்க வைத்து குடிநீராக பயன்படுத்த வேண்டும். காலரா பரவலுக்கு அசுத்தமான தண்ணீரை குடிப்பது முக்கிய காரணம் என்பதால் குடிநீரில் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
* சுத்தமான உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற உணவுகளை உண்ணக்கூடாது. வீட்டில் உணவு பொருட்களை சுத்தமான பாத்திரங்களில் கையாள வேண்டும். ஓட்டல்களில் உணவு சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
* வீட்டிலேயே இருந்தாலும் கூட அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கையை சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால் கட்டாயம் சோப்பு பயன்படுத்தி கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும்.
* காய்கறி, பழங்களை நன்றாக கழுவிட்டு சமையலுக்கும், உண்பதற்கும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக காலரா பரவும் காலத்தில் காய்கறி, பழங்களின் தோல்களை சீவிவிட்டு உண்பதற்கு எடுத்து கொள்வது சிறப்பானதாகும்.
* மாமிச உணவுகளை சமைக்கும்போது அதனை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும். அறைவேக்காட்டில் வேகவைத்த இறைச்சி வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.
* வயிற்றுப்போக்கு உள்ளிட்ட காலரா அறிகுறிகள் இருப்பின் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications