பாஜக இதை எதிர்பார்த்து இருக்காதே! கர்நாடகாவில் வினையாக மாறிய கரும்பு விவசாயி சின்னம்! தள்ளாடிய தாமரை
பெங்களூர்: தமிழ்நாட்டில் கரும்பு விவசாயி சின்னம் லோக்சபா தேர்தலின் போது பெரிய அளவில் கவனம் பெற்றது. இங்கே அரசியல் புயலையே கிளப்பிய அந்த சின்னம் கர்நாடகாவில் பாஜகவிற்கு பெரிய பிரஷர் ஆக மாறி உள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருந்த சின்னம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலை அந்த சின்னத்தின் கீழ்தான் நாம் தமிழர் கட்சி எதிர்கொண்டது. நாம், தமிழர் கட்சியின் நிரந்தர சின்னம் ஆகிவிடும் என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் நினைத்தனர்.

ஆனால் அந்த சின்னத்தை லோக்சபா தேர்தலுக்கு முன் நாம் தமிழர் இழந்தது. போதுமான வாக்கு சதவிகிதம் இல்லை . தேர்தலுக்கு முன்பே சின்னத்தை கேட்கவில்லை. முதல் ஆளாக சின்னத்தை கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை என்பதே காரணம்.
இதை காலம் காலமாக இருக்கும் விதிகள். நாம் தமிழர் கட்சி இதை தவறவிட்டது பெரிய அளவில் அந்த கட்சிக்கு எதிராக மாறியது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு கொடுக்கப்பட்டது.
அந்த சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தது. இதில் சில இடங்களில் அவர்களின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. கிட்டத்தட்ட 15 இடங்களில் அவர்கள் போட்டியிட, மற்ற இடங்களில் அந்த சின்னம் சுயேட்சை சின்னம் ஆனது.
சீமான் புகார்: இந்த சின்னத்தை பெற சீமான் உச்ச நீதிமன்றத்திற்கு எல்லாம் சென்று போராடினார். ஆனால் சின்னம் கிடைக்கவில்லை. ஏதாவது செய்து சின்னத்தை பெற படாதபாடு பட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகதான் சின்னத்தை இழக்க காரணம் என்று சீமான் கூறினார்.
இது அண்ணாமலைக்கு - சீமானுக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட காரணம் ஆனது. அண்ணாமலை மீது நேரடியாக கடுமையான புகார்களை சீமான் வைத்தார். பாஜகதான் தங்களின் கரும்பு விவசாயி சின்னம் போவதற்கு காரணம் என்று சீமான் பல இடங்களில் நேரடியாக குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.
கர்நாடகாவில் பிரஷர்: இந்த நிலையில்தான் இங்கே அரசியல் புயலையே கிளப்பிய அதே சின்னம் கர்நாடகாவில் பாஜகவிற்கு பெரிய பிரஷர் ஆக மாறி உள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா. கர்நாடக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா அங்கே பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே கர்நாடக பாஜகவில் மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். அதில் ஈஸ்வரப்பா ஒருவர். இவருக்கு லோக்சபா தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை. இவருடைய மகனுக்கும் சீட் கேட்டும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தனக்கு சீட் கிடைக்காமல் போக எடியூரப்பாதான் காரணம் என்று ஈஸ்வரப்பா புகார்களை அள்ளி வீசினார்.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பா, தனது மகன்களான பி.ஒய்.ராகவேந்திரா மற்றும் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு பதவி மற்றும் அதிகாரத்தைப் பெறுவதற்காக தன்னை ஓடுகிறார் என்று ஈஸ்வரப்பா குற்றம் சாட்டினார். கட்சியில் விஜயேந்திராவிற்கு அதிகாரம், ராகவேந்திராவிற்கு ஷிவமொக்காவில் எம்பி தொகுதி சீட் என்று பாஜக வாரிசு கட்சியாக ,மாறிக்கொண்டு இருக்கிறது என்று விமர்சனம் வைத்தார்.
இதையடுத்து கர்நாடகாவின் ஷிவமொக்கா லோக்சபா தொகுதியில் சுயேச்சை போட்டியிட பாஜகவின் கே.எஸ். ஈஸ்வரப்பா விண்ணப்பித்தார். அதோடு மோடியின் புகைப்படங்களை பயன்படுத்தி இவர் வாக்கும் சேகரித்தார். இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் மோடியின் தோற்றம் கொண்டவர்களை வைத்தும் ஈஸ்வரப்பா வாக்கு சேகரித்தார்.
இவருக்குத்தான் அங்கே கரும்பு விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை தீவிரமாக அவர் மக்களிடம் சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். கிரவுண்ட் வேலைகள் ஷிவமொக்காவில் இவரின் ஆட்கள் மூலம் தீவிரமாக நடக்கிறது. இது பாஜகவிற்கு ஏகப்பட்ட பிரஷரை வழங்கி உள்ளது. எடியூரப்பாவிற்கு பிரஷர் அதிகரித்துள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் எளிமையாக இருக்கிறது.. அங்கே உள்ள விவசாயிகளிடம் எளிதாக சென்று சேருகிறது என்பதால் பாஜகவிற்கு சின்னம் பிரஷராக மாறி உள்ளது. மற்ற சின்னம் போல இல்லாமல் இது மனிதர்களுடன் எளிதாக தொடர்புபடுத்த கூடிய மனித சின்னம் என்பதால் அங்கே ஈஸ்வரப்பாவிற்கு
சாதகம் ஆகி உள்ளது.
இதனால் பாஜகவிற்கு பிரஷர் எகிறி அடிக்கவே வேறு வழியின்றி ஈஸ்வரப்பாவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கி பாஜக கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications