பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான்
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக 3 ஆண்டுகளை சித்தராமையா நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் தான் முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவின் அடுத்த முதல்வராக டிகே சிவக்குமார் பொறப்பேற்க உள்ளார். இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முக்கிய காரணம் பிரியங்கா காந்தி தான். அவர் தான் ராகுல் காந்தி, சோனியா காந்தியின் மனதை மாற்றி டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

கர்நாடகா முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று டிகே சிவக்குமார் தொடர்ந்து கூறி வந்தார். டெல்லியில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோரிடம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தனித்தனியாக பேசினர்.
இதையடுத்து இருவரும் டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பினர். அதன்பிறகு இன்று முதல்வர் சித்தராமையா தனது அமைச்சர்களுக்கு 'பிரேக்பாஸ்ட்' விருந்து வைத்தார். அதன்பிறகு அவர் ''முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ளேன். கட்சி மேலிடம் கேட்டு கொண்டதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இன்று மாலை 3 மணிக்கு ராஜினாமா கடிதம் வழங்க உள்ளேன்'' என்று கூறினார்.
இது கர்நாடகா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 மே மாதம் முதல் தற்போது வரை 3 ஆண்டுகள் அவர் முதல்வராக பணியாற்றிய நிலையில் அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார். அதன்பிறகு புதிய முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்குவதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகா முதல்வர் விவகாரத்தை எடுத்து கொண்டால் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சித்தராமையாவே முதல்வராக தொடர விரும்பி உள்ளனர். அதோடு சித்தராமையாவுக்கு 77 வயது ஆகிறது. இதனால் இந்த முறை அவர் முதல்வராக இருக்கட்டும். டிகே சிவக்குமாருக்கு வயது 64 தான் ஆகிறது. அவர் காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு அடுத்த முறை கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்து முதல்வராகட்டும் என்று விரும்பி உள்ளனர்.
இதனால் டிகே சிவக்குமார் தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று பலமுறை டெல்லி சென்று ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்தபோது அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இந்த முறை டிகே சிவக்குமார், பிரியங்கா காந்தி வழியாக காய் நகர்த்தி உள்ளார். பிரியங்கா காந்தியுடன், டிகே சிவக்குமார் நெருக்கமாக பழகி வருகிறார். பிரியங்கா காந்தியின் ஆதரவு தொடக்கம் முதலே டிகே சிவக்குமாருக்கு தான் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த முறை எப்படியாவது முதல்வர் பதவியை பெற்று தர வேண்டும் என்று பிரியங்கா காந்தியிடம், டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.
இதையடுத்து பிரியங்கா காந்தி தலையீடு செய்துள்ளார். அம்மா சோனியா காந்தி மற்றும் அண்ணன் ராகுல் காந்தி ஆகியோரிடம் பேசினார். அப்போது சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு டிகே சிவக்குமாரை அந்த பொறுப்பில் அமர வைக்க வேண்டும். இதுதான் 2028ல் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் வெற்றிக்கு சாதகமாக மாறும். சித்தராமையா நல்ல தலைவர் தான். ஆனால் வயதாகிவிட்டது. இதனால் கட்சியில் மாற்றம் தேவை. இதனால் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்குவது தான் கர்நாடகாவில் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று கூறியுள்ளார். இதையடுத்து தான் சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க ராகுல் காந்தி, சோனியா காந்தி சம்மதித்துள்ளனர்.
இதையடுத்து தான் சித்தராமையாவிடம் முதல்வர் பதவியை விட்டு கொடுக்கும்படி கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி, சித்தராமையாவை சந்தித்தபோது, ''உங்களின் பணி சிறப்பாக உள்ளது. இருப்பினும் டிகே சிவக்குமாருக்காக முதல்வர் பதவியை விட்டு தர வேண்டும். அதோடு உங்களின் அனுபவம் கட்சிக்கு தேவை. இதனால் ராஜ்யசபா எம்பியாக்குகிறேன். கட்சியின் தேசிய அளவில் செயல்பட முன்வர வேண்டும்'' என்று கூறியுள்ளார். ஆனால் சித்தராமையாவோ, தேசிய அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் தொடர்ந்து எம்எல்ஏவாகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசீ வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications