பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த 6 பேர்.. பெங்களூர் வரை நுழைந்த சீனா? மெகா மோசடி..மொத்த கன்டிரோல் அவர்களிடம் தானாம்! பரபர தகவல்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் மோசடியின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

இப்போதெல்லாம் பகுதி நேர வேலைகளில் சேர பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். கல்லூரி மாணவர்களும் கூட தங்கள் செலவை தாங்களே பார்த்துக் கொள்ள இதுபோன்ற பகுதி நேர வேலைகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேநேரம் இப்படி பகுதி நேர வேலை தேடுபவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் பெங்களூரில் நடந்து உள்ளது.

3 பேர் அவுட்.. 3 பேர் இன்.. இந்திய அணியை புரட்டி போடும் 3 பேர் அவுட்.. 3 பேர் இன்.. இந்திய அணியை புரட்டி போடும்

 சீனாவை சேர்ந்த 6 பேர்

சீனாவை சேர்ந்த 6 பேர்

சீன நாட்டை சேர்ந்த சிலரால் நடத்தப்படும் பகுதி நேர வேலைவாய்ப்பு நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 12 வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் சுமார் ரூ. 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது. சீனா மற்றும் தைவான் நாட்டை சேர்ந்த 6 பேரின் கட்டுப்பாட்டில் தான் இந்த அனைத்து நிறுவனங்களும் இயங்குகிறது.

 பார்ட் டைம்

பார்ட் டைம்

மொத்தம் 90க்கும் மேற்பட்டோர் இந்த வேலைவாய்ப்பு மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மொத்தம் 12 இடங்களில் நேற்று நடந்த சோதனையில் 5.85 கோடி ரூபாயை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ள சீனர்கள் செயலி ஒன்றை உருவாக்கி உள்ளனர். கீப்ஷேரர் என்ற அந்த செயலில் இனைந்து, இளைஞர்கள் பார்ட் டைம் வேலையைப் பெறலாம்.

 என்ன வேலை

என்ன வேலை

இதில் இணையும் இளைஞர்களுக்குக் கிடைக்கும் பார்ட் டைம் வேலை எளிமையானது. அதாவது அவர்கள் சொல்லும் பிரபலங்களின் வீடியோகளை லைக் செய்ய வேண்டும். அவ்வளவு தான் வேலை.. ஒரு வீடியோவை லைக் செய்தால், இளைஞர்களின் செயலி கணக்கில் ரூ.20 டெபாசிட் செய்யப்படுமாம். ஆனால், இந்த செயலியில் வேலைவாய்ப்பைப் பெறத் தனியாகப் பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பல நூறு இளைஞர்களின் பதிவு கட்டணம் என்றே தனியாக ஒரு பெருந்தொகையை அவர்கள் பெற்று உள்ளனர்.

 மோசடி

மோசடி

யாருக்கும் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காக உள்ளூர் மக்களைப் பணி அமர்த்தி உள்ளனர். இந்த பார்ட் டைம் வேலைவாய்ப்பு மோசடி கடந்த சில காலமாகவே தொடர்ந்து இருக்கிறது. இந்த செயலியை ஒரு கட்டத்தில் பிளே ஸ்டோர் தனது தளத்தில் இருந்து நீக்கி உள்ளது. அதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர்கள் சிலர் இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.

 ரெய்டு

ரெய்டு

அதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. பதிவு கட்டணமாக வாங்கிய தொகையை மோசடிக்காரர்கள்கிரிப்டோகரன்சியாக மாற்றி, அதைச் சீனாவுக்கு அனுப்பியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. வேலைவாய்ப்பு மோசடி மட்டுமின்றி அதிக லாபம் ஈட்டும் முதலீடு என்றும் கூறி தனியாகப் பணத்தைப் பெற்று உள்ளனர். அதையும் ஏமாற்றி சீனாவுக்கு அனுப்பியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

 பின்னணி

பின்னணி

இந்த ஒட்டுமொத்த மோசடிக்குப் பின்னணியில் சில சீனர்கள் தான் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. மேலும், அனைத்து பரிவர்த்தனைகளும் தொலைப்பேசி மற்றும் வாட்ஸ்அப் மூலமே நடந்து உள்ளது. இந்தச் சம்பவத்தில் மொத்தம் 92 பேருக்குத் தொடர்பு இருப்பதாகும் அவர்களில் ஆறு பேர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

English summary
Chinese Nationals are Behind the mega Job Scam In Bangalore: China is trying to loot money from india in many ways.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X