தென் துருவத்தில் தரையிறங்கும் சந்திரயான் 3, லுனா 25.. இரண்டும் அருகருகே லேண்ட் ஆகுமா? விவரம்!
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் வரும் 23 ஆம் தேதி தரையிறங்க உள்ள நிலையில், ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் 21 ஆம் தேதி லேண்டிங் ஆக உள்ளது. இரண்டு விண்கலமும் தென் துருவத்திலேயே லேண்டிங் செய்யப்படுவதால் இரண்டுக்கும் இடையேயான தொலைவு எந்த அளவு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, கடந்த 2019 ம் ஆண்டு சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2, 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

இருந்தாலும் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியின் சுற்று வட்டப்பாதையை நிறைவு செய்த சந்திரயான் விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் தற்போது பயணித்து வருகிறது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குச் சென்றவுடன் சந்திரயான்-3-ன் உயரமானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில், நிலவின் 100 கிலோ மீட்டர் தொலைவிலான அடுக்குக்குள் 'சந்திரயான்-3' கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனிடையே, இன்று சந்திரயான் -3 திட்டத்தின் மிக முக்கிய பணி இன்று நடைபெற்றது. அதாவது, விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரையிறங்கும் லேண்டரை இருந்து லேண்டர் தனியாக பிரிக்கும் நடவடிக்கை நேற்று நடந்தது. அதன்படி, விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது.
அதன்பிறகு இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கியது. இந்த நிலையில், சந்திரயான் 3 வரும் 23ம் தேதி நிலவில் கால் பதிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்யா கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி விண்ணில் ஏவிய லுனா 25 விண்கலம் 21 ஆம் தேதியே நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு மேற்கொண்டது இல்லை என்ற வரலாற்று சாதனையை எந்த நாடு முதலில் நிகழ்த்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதனிடையே, சந்திரயான் 3 விண்கலம் மற்றும் லுனா 25 விண்கலம் இரண்டுமே தென் துருவத்தில் தரையிறங்க உள்ளதால் எவ்வளவு தூரத்தில் இரண்டும் தரையிறங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், தென் துருவத்தில் இரு விண்கலமும் தரையிறங்கினாலும் இரண்டுமே வெவ்வேறு பகுதிகளில் இறங்க உள்ளது.
அதாவது சந்திரயான் விண்கலம் தெற்கு அட்சரேகையில் 68 டிகிரி கோணத்திலும் லுனா விண்கலம் 70 டிகிரி அட்சரேகையிலும் இறங்க உள்ளது. எனவே, இந்த இரண்டுக்கும் இடையே தொலைவு மட்டும் பலநூறு கிலோ மீட்டர்களை தாண்டும். எனவே, ஆய்வில் நிலவின் மேற்பரப்பில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்கும்" என்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications