சூரிய காந்த புயலின் போது.. இஸ்ரோ செய்த தரமான சம்பவம்.. இந்திய செயற்கை கோள்கள் தப்பியது எப்படி?
பெங்களூர்: கடந்த 11 ஆம் தேதிகளில் சக்தி வாய்ந்த சூரிய காந்த புயல்கள் பூமியை தாக்கின. இந்த சூரிய புயல்களின் தாக்கத்தினால் இந்திய செயற்கைகோள்கள் பாதிப்பு அடையாமல் இருக்க இஸ்ரோ என்ன செய்தது என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
கடந்த 11 ஆம் தேதி சூரியனின் ஏஆர் 3664 என்ற குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து வெளிப்பட்ட சூரிய காந்த புயல் பூமியில் மிகப்பெரிய அளவில் தாக்கியது. இந்த காந்தப்புயல் தாக்கத்தின் போது, செயற்கை கோள்கள், தகவல் தொடர்பு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர்.

பாதுகாத்தது எப்படி?: எனினும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சூரிய காந்தப் புயலால் பெரிய பாதிப்பு செயற்கைகோள்களுக்கு எற்படவில்லை. இந்தியாவின் செயற்கை கோள்களை சூரிய காந்தப் புயலின் தாக்கம் ஏற்படாமல் தடுப்பதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ முக்கிய பங்காற்றியுள்ளது. இஸ்ரோ எப்படி செயற்கை கோள்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்தது என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சூரிய காந்தப் புயல் வெளிப்பட்டது. அப்போது, ஸ்ட்ராலிங்கின் 35 செயற்கைக்கோள், பூமியை நோக்கி விழத்தொடங்கின. இதனால், வானில் ஒளிக்கீற்றுகள் தென்பட்டன. இத்தனைக்கும் ஸ்ட்ராலிங்கின் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்ட சில நாட்களிலேயே சூரிய காந்தப்புயல் பாதிப்பால் கீழே விழந்தது.
சூரிய காந்த புயல்: இதனால், கடந்த 11 ஆம் தேதி வெளிப்பட்ட சூரிய காந்தப் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் ஏற்படும் பெரிய காந்தப் புயல் என்பதால், இந்திய விண்வெளி ஆய்வு மையமும் உஷார் நிலையில் இருந்தது. சூரிய காந்தப் புயல் பூமியை தாக்குவது மட்டும் இன்றி சந்திரன் மற்றும் பூமியை சுற்றியுள்ள உள்கட்டமைப்புகளை தாக்க இருந்தது.
பூமியை சுற்றி இந்தியாவின் செயற்கைக்கோள் 50க்கும் மேல் இருந்ததால் அந்த செயற்கை கோள்கள் செயல்பாடும் பாதிக்கப்படும் அபாயத்தில் இருந்தது. சூரிய காந்த புயல், தொலைத்தொடர்பு செயற்கைகோள்கள், பவர் கிரிட்கள், ஜிபிஎஸ் வழிகாட்டி அமைப்பு ஆகியவை மட்டும் இன்றி, விண்வெளி வீரர்கள், விமான பயணிகளுக்கு கூட ரேடியஷன் அளவு அதிகரிக்கும் போது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சமும் நிலவியது.
எம்சிஎப் குழு: இதனால், கர்நாடகாவின் ஹாசன் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள இஸ்ரோவின் மாஸ்டர் கட்டுப்பாடு மையம் (MCF) பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைக் கோள்களை அயராது கண்கணித்ததோடு, பாதுகாக்காவும் செய்துள்ளது.
செயற்கைகோள்களை சுற்றுவட்டப்பாதையில் உயரத்தை உயர்த்துதல், சுற்றுப்பாதையில் பேலோட் சோதனை மற்றும் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முழுவதும் அதன் செயல்பாடுகளை எம்சிஎப் மேற்கொள்கிறது. இந்த நிலையில் தான், சூரிய காந்தப்புயலின் தாக்கத்தில் இருந்தும் செயற்கை கோள்களை பாதுகாக்க உன்னிப்பாக எம்சிஎப் குழு செயல்பட்டது.
தொலைநோக்கு பார்வையுடன்: சூரிய காந்தப் புயல் நெருங்க, நெருங்க விண்கலத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களும் கவலையை ஏற்படுத்தியது. அதாவது ஒன் சைடட் பேனல்கள் கொண்ட விண்கலத்தின் வேகமும் எலக்ட்ரிக்கல் மின்சாரமும் திடீரென அதிகரித்தது. இதனால், உடனடியாக சில மாற்றங்களை கமண்ட் டீம் செய்துள்ளது. செயற்கைகோள்களில் ஆற்றல் (enegies) அதிகரிக்கும் போதும் அதன் சமநிலைத்தன்மை பாதிக்கப்படும்.
இதனால் துல்லியமாகவும் தொலைநோக்கு பார்வையுடன் துரிதமாக செயல்பட்ட இஸ்ரோ குழு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய அமைப்புகள் செயல்பாடுகளில் பாதிப்பு எதுவும் இன்றி சில சென்சார்களை செயலிழக்க செய்தது. இதன் மூலம் சூரிய காந்தப்புயலினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் 30 புவிசார் செயற்கைக்கோள்களின் வலையமைப்பு பாதிக்கப்படாமல் இருந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications