"லூடோ, காதல், ட்விஸ்ட்!" எல்லை மீறிய இளம் ஜோடி! போட்டுக் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்! பரபரப்பு

லூடோ காதல் விபரீதத்தில் முடிந்த கதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: லூடோவால் மலர்ந்த காதல் ஒன்று இப்போது இளைஞருக்குத் தலைவலியாக மாறியுள்ளது. காதலர்கள் முதலில் ஒன்று சேர்ந்த போதிலும், இப்போது அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

மொபைலில் இருக்கும் மிகப் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று தான் லூடோ. அதிலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த கேமை விளையாடுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.

இந்த கேம் தான் இப்போது பெங்களூரில் வசிக்கும் இளைஞரைப் பெரிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளது. யார் அவர்.. லூடோ விளையாட்டால் அவருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பதைப் பார்க்கலாம்.

லூடோ

லூடோ

லூடோ என்னடா புதிய டைப் கேமா என்று யாரும் குழம்பிவிட வேண்டாம்.. நம்ம ஊர் தாயம் விளையாட்டைத் தான் சற்று மாற்றி.. கலர் கலராக வைத்து லூடோ விளையாட்டை உருவாக்கியுள்ளனர். எளிமையான விதிகள், ஜாலியாக டைம் போகும் உள்ளிட்ட காரணங்களால் இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்தும் இந்த விளையாட்டை விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி லூடோ விளையாட்டில் ஏற்பட்ட காதல், ஒருவரை எந்தளவுக்கு எடுத்து வந்துள்ளது. இதனால் அவருக்கு என்ன பாதிப்புகள் எல்லாம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 வயது பெண் இக்ரா ஜீவானி என்பவர் இந்தியாவைச் சேர்ந்த முலாயம் சிங் என்பவருடன் சில மாதங்களுக்கு முன்பு லூடோ விளையாடியுள்ளனர். அவர்கள் பேசத் தொடங்க.. அது அப்படியே காதலாக மாறியுள்ளது. எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஜீவானி நேபாள வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும் சில வாரம் பெங்களூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தார். எல்லாம் நன்றாகப் போய் கொண்டிருக்கக் கடைசியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ட்விஸ்ட் அனைத்தையும் மாற்றிவிட்டது.

 முலாயம் சிங் கொடுத்த ஐடியா

முலாயம் சிங் கொடுத்த ஐடியா

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முலாயம் சிங் (26) கடந்த பல ஆண்டுகளாகப் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இவருக்காகத் தான் ஜீவானி நாடு தாண்டி வந்துள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், "ஜீவானிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் இருந்தது.. இதன் காரணமாக முலாயம் கூறிய அட்வைஸ்படி அவர் முதலில்.. நேபாளத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து சனோலி எல்லை வழியாகச் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்" என்று அதிகாரிகள் கூறினர்.

 எல்லை மீறிய ஜோடி

எல்லை மீறிய ஜோடி

அவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.. இதற்கு முன்பே முலாயம் சிங் அங்கு சென்று காத்துக் கொண்டிருந்தார்.. அவர்கள் இருவரும் காத்மாண்டுவிலேயே திருமணமும் செய்து கொண்டுள்ளனர். பின் ஒரு வாரம் அது தம்பதி அங்கேயே இருந்துள்ளனர்.. பின்னர் சனோலி எல்லை வழியாக அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

 பக்கத்து வீட்டுக்காரர்கள்

பக்கத்து வீட்டுக்காரர்கள்

அங்கிருந்து ரயில் மூலம் பெங்களூருக்கு வந்து குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர். மேலும், அவர் தனது பெயரை ராவா என்றும் மாற்றிக் கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குச் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக ஜீவானியை இந்து பெண் என்று முலாயம் சிங் அறிமுகப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஜீவானி தொழுகை நடத்துவதைக் கண்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

 நாடு கடத்தல்

நாடு கடத்தல்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் அவர் பாகிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்கு வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை மீண்டும் நாடு கடத்த போலீசார் முடிவு செய்தனர். பெங்களூர் போலீசார் அவரை கைது செய்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டாரி எல்லை வழியாக அவர் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+