கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜி சிக்கியது எப்படி? போலீசுக்கு துப்பு கிடைத்தது எப்படி? பரபர தகவல்கள்
பெங்களூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த அவர் சிக்கியது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 3 கோடி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவை கடந்த மாதம் 17ஆம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என கருதப்பட்டது.

விருதுநகர் ஆர்ப்பாட்டம்
இதையடுத்து அதிமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி அன்று முதல் தலைமறைவானார். இவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அவர் அவசர அவசரமாக வெவ்வேறு காரில் தப்பி சென்றார் என கூறிய விருதுநகர் காவல் துறை அவர் தலைமறைவாக இருந்ததாக அறிவித்தது.

வங்கிக் கணக்குகள் முடக்கம்
இந்த நிலையில் அவரை கேரளா, சென்னை, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். அவர் ஒவ்வொரு இடமாக தப்பி கொண்டே வந்த நிலையில் அவரது நடமாட்டத்தை முடக்க அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் அவரை பிடிக்க முடியவில்லை.

டெல்லியில் பதுங்கிய ராஜேந்திர பாலாஜி
அவர் டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவர் கர்நாடகாவில் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து அவர் தலைமறைவாக இருந்த ஹாசன் மாவட்டத்திற்கு சென்று காரில் இருந்த ராஜேந்திர பாலாஜியை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் காரில் தப்பி செல்ல முயன்றார். 20 நாட்கள்

ராஜேந்திர பாலாஜி கைது
உடனே தனிப்படை போலீஸார் அவரை சாலையிலேயே மடக்கி கைது செய்தனர். 20 நாட்களாக தேடப்பட்டு வந்த ராஜேந்திர பாலாஜி கைதானது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ராஜேந்திர பாலாஜி கைதுக்கு முக்கியமாக உதவியவர்கள் சைபர் கிரைம் போலீஸார். ராஜேந்திர பாலாஜி ஒவ்வொரு ஊராக தப்பினாலும் அவர் யாரிடம் உதவி கேட்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த லிஸ்டை சைபர் கிரைம் எடுத்தனர்.

ராஜேந்திர பாலாஜி கைதானது எப்படி
அது போல் உறவினர்களில் அவர் யாருடன் எல்லாம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த பட்டியலும் எடுக்கப்பட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜியின் நண்பர்கள், கட்சியினர் என நெருக்கமானவர்கள், குடும்பத்தினருக்கு எந்த செல்போன், டெலிபோனில் இருந்து போன் வந்தாலும் அந்த கால்கள் கண்காணிக்கப்பட்டன.

ராஜேந்திர பாலாஜியை கண்டுபிடித்தது யார்
மேலும் ரிசார்ட்கள், ஹோட்டல்களில் தங்கினால் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் அவர் ஒவ்வொரு ஊராக காரில் தப்பி கொண்டே இருந்தார். இந்த நிலையில்தான் அவர் தனது உறவினர் ஒருவருடன் பேசி போன் கண்காணித்த போது அவர் ஹாசன் மாவட்டத்தில் இருந்து பேசுவது தெரியவந்தது. டெல்லியில் இருக்கலாம், அங்கிருக்கலாம், இங்கிருக்கலாம் என தங்கள் பார்வையை திசை திருப்பிக் கொண்டது போல் நடித்த தனிப்படை போலீஸார் ஹாசன் மாவட்டத்தில் காரில் இருந்த ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்தனர். எனவே ராஜேந்திர பாலாஜியின் கைதில் முக்கிய பங்களிப்பு சைபர் கிரைமிற்கு உண்டு என்றே சொல்லலாம்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!












Click it and Unblock the Notifications