இதுதான் சார் லவ்.. காதலிக்காக டெல்லி நீட் எதிர்ப்பு போர்க்களத்தில் குதித்த காதலன்.. நெகிழ வைக்கும் கதை
டெல்லி: டெல்லி நீட் போராட்டத்திற்கு மத்தியில், செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஒரு ஜென் ஜி இளைஞர் அளித்த பதில், தற்போது சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

'காக்கரொச் ஜனதா கட்சி' சார்பில் ஜந்தர் மந்தரில் நடத்தப்பட்ட பாராளுமன்ற முற்றுகை பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். போர்க்களமாக மாறிய டெல்லி வீதிகளில், கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தடியடிகளை மீறி மாணவர்கள் தங்களின் குரலை பதிவு செய்தனர்.
ஆனால், இந்த அரசியல் கொந்தளிப்பிற்கு மத்தியில், செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஒரு ஜென் ஜி இளைஞர் அளித்த பதில், தற்போது சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
செய்தியாளரின் கேள்வி
போராட்ட களத்தில் பதற்றமான சூழல் நிலவியபோது, வீதியில் நின்றிருந்த அந்த இளைஞரிடம் செய்தியாளர் ஒருவர் மைக்கை நீட்டினார். "நீங்களும் நீட் தேர்வு எழுதினீர்களா? அல்லது வேறு ஏதேனும் கோரிக்கைகளுக்காக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்..
அதற்கு அந்த இளைஞர் அளித்த பதில் அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "நான் நீட் தேர்வு எழுதவில்லை சார்.
என்னுடைய காதலி தான் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்டு படித்து ஆயத்தமாகி வந்தார். ஆனால், இந்த வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு காரணமாக அவருடைய உழைப்பு வீணாகிவிட்டது.
இதனால் கடந்த ஒரு மாதமாக அவர் மன உளைச்சலில் இருக்கிறார். அவளால் இந்த போராட்டத்திற்கு வர முடியவில்லை. அதனால், அவளுக்காக நான் இங்கு வந்து நிற்கிறேன்" என்று மிகவும் இயல்பாகவும், அழுத்தமாகவும் கூறினார்.
காதலுக்காக எதையும் செய்யும் ஆண்கள்
தான் நேசிக்கும் பெண்ணின் கனவு சிதைக்கப்பட்டதையும், அவளது போராட்டத்தையும் கண்டு சும்மா இருக்க முடியாமல், டெல்லி வீதியில் இறங்கி போராட வந்த அந்த இளைஞனின் வீடியோ இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் தீயாக பரவி வருகிறது.
"Man do anything for love" என்ற கேப்ஷனுடன் நெட்டிசன்கள் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
அரசியல் கோஷங்களும், அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களும் நிறைந்த போராட்டக் களத்தில், ஒரு தனிமனிதனின் உண்மையான காதலும், தன் காதலிக்கு உடன் நிற்கும் மனப்பான்மையும் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இன்றைய ஜென் ஜி தலைமுறையினர் வெறுமனே சமூக வலைதளங்களில் மட்டும் இயங்குபவர்கள் அல்ல.. தங்கள் காதலுக்காக எந்த எல்லையையும் கடந்து களத்தில் நிற்பவர்கள் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளதாக நெட்டிசனைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமா, பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் தேசிய தேர்வு முகமையில்மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
