சின்னதா ஒரு கணக்கு.. முட்டி மோதும் காங்கிரஸ் + பிஜேபி.. கெத்து காட்டும் குமாரசாமி.. யாருக்கு பிளஸ்
பெங்களூரு: கர்நாடக தேர்தல் முடிவில், யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காதபட்சத்தில், தொங்கு சட்டசபை அமையலாம் என்கிறார்கள்.. அப்படியே தொங்கு சட்டசபை அமைந்தால் யாருக்கு சாதகமாக இருக்க போகிறது?
இந்த தேர்தலை பொறுத்தவரை, இதுவரை இல்லாத அளவில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.. 2018-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பதிவான 72.44 சதவீதம் தான் இதுவரை அதிகமாக இருந்தது.. இப்போது அதைவிட கூடுதலாக 0.75 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகியிருக்கின்றன.. அதாவது, 1952 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.

வழக்கமாக, பொதுத்தேர்தலில் 60 முதல் 65 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடப்பது வழக்கம்.. வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால், எதிர்க்கட்சிகளுக்கு சாதகம் என்ற கருத்து, இந்திய அரசியல் வட்டாரங்களில் இருந்து வருகிறது..
ஆனால், நம்முடைய திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, இந்த கருத்தெல்லாம் அடிபட்டு போனது வேறு விஷயம்.. அப்போது அதிமுகவின் வாக்கு வங்கி குறையவே இல்லை.. திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைதான் அதிகரித்தது..
ரிசல்ட் இன்று: எனினும், வாக்கு சதவீதம் அதிகமாக பதிவாகி இருந்தால், அது ஆளும் கட்சிக்கு எதிரானதாக கருதப்படுவது இயல்பான விஷயமாகும்.. காரணம், ஆளும்கட்சி மீதான கோபத்தை இது அம்பலப்படுத்துவதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.. இதுவே குறைவான வாக்குசதவீதம் என்றால், அது ஆளும் ஆட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.. அந்தவகையில், கர்நாடகாவில், அதிகமாக இருந்தால், அது ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே பார்க்கப்படும்.
அதிகமான பதிவுகள்: உதாரணத்துக்கு இதே கர்நாடக மாநிலத்தில், கடந்த 2008-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, 65 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.. பிறகு, 2013-ம் ஆண்டு தேர்தலில், 71.45 சதவீத வாக்குப்பதிவும், 2018-ல் 72.36 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகி இருந்தன.. இந்த பட்டியலின்படி பார்த்தால், ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்கு பதிவின் சதவீமானது, அதிகரித்தபடியே உள்ளது.. அதாவது, அந்தந்த நேரத்தில் ஆளக்கூடிய கட்சிகளுக்கு எதிரான மனநிலைமையைத்தான் இந்த வாக்கு பதிவுகள் நிரூபித்திருக்கின்றன..
இன்றைய தினம் வெளியாகும் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கும்? தனிப்பெரும்பான்மையுடன் கூடிய வெற்றியை அளிக்குமா? அல்லது தொங்கு சட்டமன்றம் அமையுமா? அப்படியே தொங்கு சட்டமன்றம் அமைந்தால் யார், யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்ற யூகங்கள் வெடித்துகிளம்பி உள்ளன.
கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை, மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் பாஜகவுக்கு 113 அல்லது அதற்கு மேல் பெற்றுவிட்டால் தனித்து ஆட்சி அமைத்துவிடும்.. ஒருவேளை, 105 முதல் 110 சீட்கள் வரை பெற்றால் தனிப்பெரும் கட்சியாக மட்டுமே உருவெடுக்கும்.. ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் அல்லது சுயேட்சைகளின் ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும்.
மதச்சார்பற்ற ஜனதாதளம்: ஒருவேளை 80 சீட்களுக்கு குறைவாக பெற்று, மதச்சார்பற்ற ஜனதா தளமும் 25 சீட்களுக்கு குறைவாக வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பது கனவாய் போய்விடும். 75 சீட்களுக்கு கீழ் வெற்றி சென்றுவிட்டால் பாஜக ஆட்சியை இழப்பது மட்டுமின்றி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியானது காங்கிரஸ் பக்கம் தாவிவிடும்..
இதையே காங்கிரஸை எடுத்துக் கொண்டால், கருத்துக்கணிப்புகளின்படி 120 சீட்களுக்கு மேல் வெற்றி பெற்றால், தனித்து ஆட்சி அமைத்துவிடும்.. 105 சீட்களுக்கு மேல் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தால், பாஜகவை போலவே, மதச்சார்பற்ற ஜனதா தளம் அல்லது சுயேட்சைகளின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். 90 சீட்களுக்கு கீழ் போய்விட்டால், பாஜக அரியணை ஏறிவிடும்.. காங்கிரஸ் மண்ணைக்கவ்வும்.
ஆக, 2 கட்சிகளுமே மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை நாட வேண்டியிருக்கும் என்பதால், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஏகப்பட்ட கிராக்கிகள் பெருகிவிடும்.
முந்தைய வழிகள்: இதில் பாஜக, கடந்த தேர்தலை போலவே, இந்த முறையும் மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை இழுப்பதற்காக தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.. இதுபோலவே காங்கிரசும் அதே ரூட்டில் தயாராக இருப்பதாக கூறுகிறார்கள்.. எனினும், ஆட்சி அமைப்பதில், பாஜகவுக்கு தேர்தலுக்கு முந்தைய வழிகள், தேர்தலுக்கு பிந்தைய வழிகள் என்ற 2 வழிகளை கையாளும்.. அதனால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டுமெனில், அது மெஜாரிட்டி இடங்களைக் கைபற்ற வேண்டியிருக்கிறது.. தங்களுக்கு மெஜாரிட்டியே இல்லாவிட்டாலும், தொங்கு சட்டசபை ஏற்பட்டால், அதுவும் பாஜகவுக்குதான் வாய்ப்பாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
குமாரசாமி கறார்: இதற்கு நடுவே, குமாரசாமி இப்பவே கறார் காட்ட துவங்கிவிட்டர். "ஒத்து வந்தால் தான் கூட்டணி" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். பாஜக, காங்கிரஸ் 2 பேருமே தங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லி பகீரை கிளப்பி விட்டுள்ளார்.. ஆகமொத்தம், இந்த தேர்தலை, மிகச்சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் பலே கணக்கு போட தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications