மனைவியை கொலை செய்ததாக கைதான கணவர்! கடைசியில் ட்விஸ்ட்.. 3 ஆண்டுக்கு பின் ஆண் நண்பருடன் சிக்கிய பெண்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் மனைவியை கொலை செய்ததாக கணவர் சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அவர் ஒன்றரை ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட அவரது மனைவி மீண்டும் நேரில் வந்து தான் உயிருடன் தான் இருக்கிறேன். என் கணவர் என்னை கொலை செய்யவில்லை. நான் தான் வேறு ஒருவருடன் வசித்து வருகிறேன் என்று கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஓசூர் அருகே உஷா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவரது மனைவி மல்லிகே. இவர்களுக்கு இடையே அவ்வப்போது சிறுசிறு சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு நாள் மனைவி மல்லிகேவை காணவில்லை. இதனால் மனைவியை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை.

husband-arrested-for-murder-his-wife-then-she-finds-alive-3-years-later

இறந்த நிலையில் பெண் உடல்

இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லிகேவை தேடி வந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் இறந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து சுரேஷிடம் தகவல் அளிக்கப்பட்டது. அப்போது உடல் கிடந்த இடத்தில் இருந்த காலனி, என் மனைவி அணிந்தது போல் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் விசாரணை நடத்திய போலீஸ், இறுதியில் சுரேஷ் தான் கொலை செய்ததாக அவரை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுரேஷ் தான் கொலை செய்யவில்லை என்று போலீசாரிடம் பலமுறை கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே உடல் கைப்பற்றப்பட்ட பெண்ணின் டிஎன்ஏவோடு, மல்லிகேவின் தாயின் டிஎன்ஏ ஒத்துப்போகிறதா என்ற பரிசோதனை ஆய்வு முடிவதற்கு முன் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்த மனைவி

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சுரேஷ் இந்த கொலையை செய்யவில்லை என்று அவரது உறவினர்கள், ஊர்க்காரர்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் கூறினர். எனினும் சுரேஷ்க்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுத்துவிட்டது. இதற்கிடையே ஒன்றரை வருடத்திற்கு பிறகு சுரேஷ் ஜாமீனில் வெளி வந்தார். அப்போது இறந்துவிட்டதாக கூறப்பட்ட அவரது மனைவி மல்லிகே உயிரிழக்கவில்லை என்றும், வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும் அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை எப்படியாவது கண்டுபிடித்து இந்த வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று எண்ணிய சுரேஷ், நண்பருடன் சேர்ந்து மனைவியை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் ஓட்டலில் உணவு சாப்பிடும் வீடியோ சிக்கியது. இதையடுத்து அந்த வீடியோவை கோர்டில் சமர்பித்த சுரேஷ், தொடர்ந்து தன் மனைவியை கண்டுபிடித்து தர போலீசாருக்கு உத்தரவிடும் படி கூறினார்.

நீதிமன்றம் உத்தரவு

அதன்பேரில் விசாரணை மேற்கொண்டதில், சுரேஷ் வசித்து வந்த வீட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டிபெட்டி என்ற ஊரில் தான் வேறு ஒருவருடன் மல்லிகே வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் நேரில் வந்து ஆஜரானார். இதையடுத்து மனைவியை கொன்றதாக கூறி கைதாகி ஒன்றரை ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்த சுரேஷ் வழக்கின் விசாரணையின் முழு அறிக்கையை வரும் 17 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோர்ட் உத்தரவிட்டது.

இது தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர், சரியான விசாரணை செய்யாத போலீசார் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், எந்த ஒரு தீவிர விசாரணையும் செய்யாமல் யாரோ ஒரு பெண் கொலை செய்யப்பட்டதற்கு சுரேஷ் ஒன்றரை ஆண்டுகள் தண்டனை அனுபவித்துள்ளார் என்று முறையிட்டார். இதற்கு பதில் அளித்த நீதிபதி, இது அரிதினும் அரிதான வழக்கு. இறந்த பெண் யார்? எந்த விசாரணையும் இல்லாமல் எப்படி ஒரு நிரபராதியை கைது செய்தீர்கள் என்பதற்கான முழு அறிக்கையினை வரும் 17 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+