கல்யாணமாகி.. ஹனிமூனெல்லாம் போய்.. 6 மாதம் கழித்து.. மனைவியை வேண்டாம்னு சொன்ன கணவர்!
மனைவியை ஹெல்மெட்டால் தாக்கிய கணவனை தேடி வருகிறார்கள்
பெங்களூரு: கல்யாணமாகி... ஹனிமூன் முடிந்து.. 6 மாசம் ஜாலியாகவும் இருந்துவிட்டு.. அதற்கு பிறகு மனைவியிடம் "நீ அழகா இல்லை, எனக்கு வேண்டாம், நான் இன்னொரு கல்யாணம் செய்துக்க போறேன்" என்று சொல்லி உள்ளார் கணவர்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு விஜயநகர் அருகே மாரேனஹள்ளியை சேர்ந்தவர் சசிக்குமார்.. 36 வயதாகிறது.. இவரது மனைவி விஜயலட்சுமி.. இவருக்கு 32 வயதாகிறது.. கல்யாணம் ஆகி தற்போது ஒரு வருடம் ஆகிறது.

சசிக்குமார் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரின் சம்மதத்துடன்தான் கல்யாணம் நடந்துள்ளது... 6 மாசம் வரை சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
ஆனால் அதற்கு பிறகுதான் மனைவியிடம் "நீ அழகாக இல்லை, உன்னுடன் சேர்ந்துவாழ எனக்கு விருப்பம் இல்லை" என்று சசிக்குமார் சொல்ல ஆரம்பித்துள்ளார்.. சசிக்குமாருக்கு பிரச்சனை விஜயலட்சுமி இல்லை.. வேறு ஒரு பெண்!!
அந்த பெண்ணை கல்யாணம் செய்யவே இப்படி மனைவியுடம் சொல்ல தொடங்கி உள்ளார்.. 2-வது கல்யாணம் குறித்தும் மனைவியிடம் தெரிவித்து, விவாகரத்தும் கேட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, "என்னங்க, கல்யாணம் ஆகி 6 மாசம் கழிச்சு, இப்போ வந்து சொல்றீங்க"என்று கேட்டு டைவர்ஸ்-க்கு மறுத்துள்ளார்.
இது சசிக்குமாருக்கு ஆத்திரத்தை தந்தது.. அடிக்கடி விவகாரத்து கேட்டு தகராறும் செய்து வந்துள்ளார்.. ஒரு கட்டத்தில் அழுதுகொண்டே விஜயலட்சுமி அவரது அம்மா வீட்டுக்கும் சென்றார்.. ஆனால் மகளை அவர்கள் சமாதானப்படுத்தி திரும்பவும் சசிகுமாரிடமே சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
விஜயலட்சுமியை பார்த்ததும் மறுபடியும் டைவர்ஸ் விவகாரத்தை எடுத்தார் சசிகுமார்... இதனால் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு வந்துள்ளது... அந்த சண்டையில், விஜயலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார் சசிகுமார்.. அடி, உதை மட்டுமில்லை.. ஆசிட் ஊற்றிடுவேன்.. என்று மிரட்டி டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போடும்படி மிரட்டி உள்ளார்.. இதற்கு விஜயலட்சுமி பிடிவாதமாக மறுக்கவும் ஹெல்மெட்டாலேயே அவரது தலையில் தாக்கியுள்ளார் சசிகுமார்.
இதில் தலையில் இருந்து ரத்தம் கொட்ட... படுகாயமடைந்த விஜயலட்சுமியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் சசிகுமார் எஸ்.ஆகி விட்டார்.. மகளின் நிலையை பார்த்து கொந்தளித்த விஜயலட்சுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவும், தலைமறைவாக உள்ள சசிக்குமாரை தேடி வருகின்றனர்.
-
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications