இன்னும் மூன்றே மாதங்கள்தான்.. என்ன செய்யப்போறேன் பாருங்க.. எடியூரப்பா அதிரடி பேச்சு
பெங்களூர்: இன்னும் மூன்றே மாதங்களில், கடந்த ஆட்சியை விட சிறப்பான ஆட்சியை வழங்குவதாக, பொதுமக்கள் எனது ஆட்சி பற்றி பேசுவார்கள் என்று எடியூரப்பா பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய போது உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
இன்று மாலை 6 மணிக்கு, முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளதாக அறிவித்த நிலையில், பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் குவிய தொடங்கினர்.

இதையடுத்து, காடுமல்லேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய எடியூரப்பா, கட்சி அலுவலகம் வந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், எப்போது இந்த ஆட்சி தொலையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த திருநாள் தற்போது நடந்து விட்டது. பாஜக ஆட்சி தற்போது மலரப் போகிறது. எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் போக்குடன் நடந்து கொள்ளப் போவதில்லை. அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி வழங்குவது எனது நோக்கம்.
இன்னும் மூன்றே மாதங்களில், முந்தைய ஆட்சியாளர்களைவிட, எடியூரப்பா ஆட்சி மிக சிறப்பாக நடக்கிறது, என்று மாநிலம் முழுக்க மக்கள் பேசும் அளவுக்கு ஒரு ஆட்சியை கொடுக்கப் போகிறேன், என்று எடியூரப்பா தெரிவித்தார்.
எடியூரப்பா உரையாற்றியபோது, தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து கட்சி அலுவலகத்தில் இருந்து, நேரடியாக ராஜ்பவன் நோக்கி கிளம்பினார் எடியூரப்பா.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!










Click it and Unblock the Notifications