திங்கள்கிழமையே பெரும்பான்மையை நிரூபிக்கப்போகிறேன்.. எடியூரப்பா அதிரடி
பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் ஜூலை 29ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக அம்மாநில முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கடந்த செவ்வாய்க்கிழமை, சட்டசபையில் நடந்த, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கவிழ்ந்தது.

இதையடுத்து கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா இன்று காலை சுமார் 10 மணியளவில் பெங்களூரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் வஜுபாய் வாலாவை, சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதன்பின்னர் இன்றே முதல்வரவாக பதவியேற்க போவதாக எடியூரப்பா அறிவித்தார். இதன்படி இன்று மாலை 6.30 மணியளவில், கர்நாடக ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 76 வயதாகும் எடியூரப்பா கர்நாடகாவின் 25வது முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா, அவருக்கு பதவிப் பிரமாணம் மற்றும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இந்நிலையில் முதல்வராக பதவியேற்றபின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, கர்நாடகா சட்டசபையில் ஜூலை 29ம் தேதி காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பேன். பெரும்பான்மையை நிரூபித்தவுடன் சட்டசபையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications