கடையை சேதப்படுத்திய இந்து அமைப்பினர்.. என்னை கொன்றுவிடுங்கள்! முஸ்லிம் வியாபாரி உருக்கம்
பெங்களூர்: தார்வாரில் அனுமன் கோவில் அருகே முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டன. இதுபற்றி வியாபாரி நபிசாப்பிடம், ‛‛போலீசில் புகார் கொடுத்தீர்களா'' என நிருபர் கேட்டதற்கு, ‛‛நான் கைகளை உயர்த்தி நிற்கிறேன். என்னை கொன்று விடுங்கள். எனக்கு வாழ்வாதாரம் கொடுத்த பழங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து அழுகிறேன். இப்போது என் சம்பாத்தியத்துக்கான வழிகள் இல்லாமல் போய்விட்டது. இதனால் கண்ணீர் அதிகமாகி உள்ளது. இந்த வேளையில் புகார் குறித்து பேசி பயனில்லை'' என கண்ணீர் மல்க கூறினார்.
கர்நாடகத்தில் ஹிஜாப் தடை, கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி மறுப்பு, ஹலால் உணவு பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்தன.
தற்போது முஸ்லிம் வியாபாரிகளிடம் பழங்கள், காய்கறிகள் வாங்க வேண்டாம் எனவும், முஸ்லிம்களின் வாகனங்களில் பயணிப்பதை தடுக்க வேண்டும் எனவும் இந்துத்துவ அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன.
இந்நிலையில் தார்வார் மாவட்டத்தில் கோவில் அருகே பழவியாபாரம் செய்த முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

கடைகளுக்கு எதிர்ப்பு
தார்வார் நுக்கேரி பகுதியில் அனுமன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே ஏழைகள் கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் பூஜை பொருட்கள், பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இங்குள்ள முஸ்லிம்களின் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என 10 நாட்களுக்கு முன்பு ஸ்ரீராமசேனை அமைப்பினர் கோவில் நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். மேலும் கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

சூறையாடப்பட்ட கடைகள்
இந்நிலையில், நேற்று திடீரென்று கோவில் அருகே ஸ்ரீராமசேனை அமைப்பை சேர்ந்தவர்கள் சென்றனர். அவர்கள் அங்குள்ள முஸ்லிம்களின் பழ கடைகளை சூறையாடினர். தர்பூசணி பழங்களை கீழே வீசி உடைத்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

15 ஆண்டுகளாக வியாபாரம்
இதுதொடர்பாக தர்பூசணி வியாபாரி நபிசாப் கூறுகையில், ‛‛8 முதல் 10 பேர் வேகமாக வந்தனர். நான் மட்டுமே இருந்தேன். அவர்கள் எதுவும் பேசாமல் கடையை சூறையாடினர். மொத்தம் 6 குவிண்டால் தர்பூசணி வாங்கி வைத்திருந்தேன். இதில் 1 குவிண்டால் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இந்த கோவில் அருகே நான் கடந்த 15 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறேன். இதுவரை எந்த பிரச்சனையையும் சந்தித்தது இல்லை. இப்போது தான் முதன்முதலாக பிரச்சனையை சந்தித்து உள்ளேன்.

கொன்று விடுங்கள் என உருக்கம்
கூட்டாக அவர்கள் வந்த நிலையில் நான் மட்டும் இருந்தேன். என்னால் என்ன செய்ய முடியும். நான் தடுக்க நினைத்தால் கோபத்தில் கூடுதல் பழங்களை உடைப்பார்கள்'' என்றார். இந்த வேளையில், போலீசில் புகார் கொடுத்தீர்களா என நிருபர் கேட்டதற்கு, ‛‛நான் கைகளை உயர்த்தி நிற்கிறேன். என்னை கொன்று விடுங்கள். எனக்கு வாழ்வாதாரம் அழித்த பழங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து அழுகிறேன். இப்போது என் சம்பாத்தியத்துக்கான வழிகள் இல்லாமல் போய்விட்டது. இதனால் கண்ணீர் அதிகமாகி உள்ளது. இந்த வேளையில் புகார் குறித்து பேசி பயனில்லை'' என்றார்.

போலீசார் வழக்குப்பதிவு
இதுபற்றி கோவில் நிர்வாகம் சார்பில் கூறுகையில், ‛‛கோவில் அருகே கடை வைத்திருப்பவர்களில் 99 சதவீதம் பேர் இந்துக்கள் தான். ஸ்ரீராமசேனை அமைப்பினர் கொடுத்த மனு குறித்து பரிசீலனை செய்து வந்தோம். ஆனால் அதற்குள் அவர்கள் இப்படி செய்துவிட்டனர்'' என்றார்.
இதுதொடர்பாக தார்வார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணகாந்த் கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை'' என்றார்.

மனிதர்களே இல்லை
இந்த சம்பவத்துக்கு கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீரில் மக்களை கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், ஏழைகளின் வாழ்வாதாரத்தை நாசவேலைகளால் பறிக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மனிதர்களும் இல்லை. இந்துக்களும் இல்லை. இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications