பயங்கரவாதிகளே.. மோடி மீண்டும் பிரதமரானால் உங்கள் வாலுடன் தலையும் துண்டிக்கப்படும்: பாஜக சிடி ரவி
பெங்களூர்: மோடி நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்றால் பயங்கரவாதிகளின் வாலுடன் தலையும் சேர்த்து துண்டிக்கப்படும் என கர்நாடகா மூத்த பாஜக தலைவர் சிடி ரவி எச்சரிக்கை விடுத்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர் சிடி ரவி, தமிழ்நாட்டு பாஜக தலைவர்களுக்கும் மிக நெருக்கமானவர். தமிழ்நாடு விவகாரங்களிலும் அரசியலிலும் தலையிட்டு பல்வேறு கருத்துகளை தெரிவிப்பவர்.

கர்நாடகா பாஜக தலைவர் பதவியை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்து போனவர். இதனால் பாஜக தலைமை மீது சற்று அதிருப்தியையும் வெளிப்படுத்தி வந்தார். அதேநேரத்தில் மேலிடத்தின் கவனத்தையும் தொடர்ந்து ஈர்க்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார் சிடி ரவி.
பெங்களூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிடி ரவி கூறியதாவது: ராஜ்யசபா தேர்தலின் போது நசீர் உசேன் எம்பியின் ஆதரவாளர்கள், ஜிந்தாபாத் பாகிஸ்தான் என கோஷம் போட்டனர். ஆனால் காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டிகே சிவகுமாரும் பொய்யான தகவல்களையே தெரிவித்தனர்.
டிஜிஹள்ளி, கேஜி ஹள்ளியில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களையும் அப்பாவிகள்தான் என்றது காங்கிரஸ். இதனால்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

பாலைவன மாநிலமான ராஜஸ்தானை விட பெங்களூர் மாநகரில்தான் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பெங்களூர் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை.
பிரதமர் மோடி நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்பார். மோடி மீண்டும் பதவியேற்கும் போது பயங்கரவாதிகள் வால் ஒட்ட நறுக்கப்படும். பயங்கரவாதிகளின் வால் மட்டுமல்ல தலையையும் சேர்த்து நரேந்திர மோடி துண்டித்துவிடுவார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விஷத்துடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகிறார். யார் விஷம்? எந்த கட்சி விஷம்? என்பதை மக்கள் நன்றாகவே புரிந்தும் தெரிந்தும் வைத்துள்ளனர் என்பதை கார்கே உணர வேண்டும். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவப் போகிறது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் விளக்கு ஏற்றுவதற்கு கூட ஒருவரும் இல்லாத நிலைமைதான் உருவாகப் போகிறது என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர வேண்டும். இவ்வாறு சிடி ரவி கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications