‛விஷப்பாம்பு’.. மோடி பற்றி வார்த்தையை விட்ட கார்கே! கடும் எதிர்ப்பால் பரபர விளக்கம்! முழுவிபரம்
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி விஷப்பாம்பு போன்றவர் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசிய நிலையில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சர்சசையாக மாறிய நிலையில் மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பான விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறார். மேலும் இது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாநிலமாகும். இதனால் எப்படியாவது காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டு வருகிறார்.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினரை ஒருங்கிணைத்து கட்சி பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதோடு மாநிலத்தில் தீவிர பிரசாரத்திலும் மல்லிகார்ஜூன கார்கே ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஹைதரபாத்-கர்நாடகா மாவட்டங்களில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் கதக் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்று பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே,‛‛ பிரதமர் நரேந்திர மோடி விஷப்பாம்பை போன்றவர். அவர் விஷம் உள்ளவரா, இல்லையா என்பதை பரிசோதிக்கும் வகையில் அவரை தீண்டினால் இறந்துவிடுவீர்கள்'' என பொருள்படும்படி பேசினார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் நரேந்திர மோடியை மல்லிகார்ஜூன கார்கே அவமதிப்பு செய்ததாக பாஜகவினர் விமர்சனம் செய்தார். இதையடுத்து மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‛‛நான் பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு சொல்லவில்லை. பாஜகவை தான் விமர்சித்தேன். பாஜகவின் கொள்கை தான் விஷப்பாம்பு போன்றது'' என பேசியதாக கூறினார். இருப்பினும் எதிர்ப்பு மட்டும் குறையவேயில்லை.

இந்நிலையில் தான் மல்லிகார்ஜூன கார்கே மற்றொரு விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛எனது கருத்து தவறாக கருதப்பட்டு யாரையாவது புண்படுத்தி மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன். பாஜகவுக்கு எங்களுக்கும் கருத்தியல் ரீதியிலான வேறுபாடுகள் உள்ளன. ஆர்எஸ்எஸ்-பாஜக சித்தாந்தம் என்பது விஷம் போன்றது. அதனை பிரதமருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்ததாக கூறி வருகின்றனர். யாரையும் புண்படுத்தி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை'' என தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications