"பெங்களூரில் வாழ விரும்பினால் இந்தியில் பேசுங்கள்".. வட மாநில நபரால் கொதித்து போன கன்னடர்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் அடிக்கடி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கள் ஓங்கி ஒலிப்பது வழக்கம். அப்படி ஒரு சம்பவம் தான் பெங்களூரில் அண்மையில் நடந்துள்ளது. இந்த வீடியோவில் ஒருவர், ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்கிறார். அப்போது அவர் "பெங்களூரில் வாழ விரும்பினால் இந்தியில் பேசுங்கள்" என்று காட்டமாக இந்தியில் கூறுகிறார். அதற்கு ஆட்டோ டிரைவர் நீ கர்நாடாவில் இருக்க வேண்டும் நீ தான் கன்னடத்தில் பேச வேண்டும் என்று கன்னடத்தில் கூறுகிறார்.. இந்த வீடியோவை பார்த்த கன்னட மொழி ஆர்வலர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரில் அடிக்கடி இந்தி திணிப்புக்கு எதிராக குரல்கள் ஒலிப்பது நடக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் மற்றும் வணிகம் செய்வோர் இந்தியில் பேச வேண்டும் என்று சில வட நாட்டு இளைஞர்கள் மற்றும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல் கன்னடம் தெரிந்தாலும், இந்தியிலேயே பலர் பேசுவது நடக்கிறது.

இதன் காரணமாக அவ்வப்போது பிரச்சனை வரும். அதேபோல் பெங்களூரில் பல வருடம் இருந்தாலும் கன்னடத்தை கற்றுக்கொள்ள விரும்பாமல் இந்தியை மட்டுமே விரும்புவதையும் அம்மாநில கன்னட மொழி ஆதரவாளர்கள் கண்டிக்கிறார்கள். இப்படி பல சந்தர்ப்பங்களில் இந்திக்கு எதிராக பெங்களூரில் மொழி போராட்டங்கள் நடந்துள்ளது.
இந்தியில் பேசு
அப்படித்தான் பெங்களூருவில் கன்னடர் அல்லாத ஒருவருக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே நடந்த ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோ வைரலாகி, பெங்களூர் நகரில் மொழி தொடர்பாக புதிய விவாதத்திற்கு காரணமாகி உள்ளது. வைரலாகும் வீடியோவில், ஒரு வட மாநில நபர் ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்கிறார். அதில், "பெங்களூரில் வாழ விரும்பினால் இந்தியில் பேசுங்கள்" என்று கோபமாக பேசுகிறார். உடனே அவரது நண்பர்கள் தலையிட்டு அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர்.
கன்னடத்தில் பேசு
அப்போது ஆட்டோ ஓட்டுநர் இப்படி பேசுகிறாரே என்று வருத்தப்பட்டதுடன், "நீங்கள் தான் பெங்களூருக்கு வந்திருக்கிறீர்கள், நீங்கள் கன்னடத்தில் பேச வேண்டும். நான் இந்தியில் பேசமாட்டேன்" என்று பதிலடி கொடுக்கிறார். வாக்குவாதத்தின் பின்னணி என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் வட மாநில நபரின் கருத்து சமூக ஊடகங்களில், குறிப்பாக கன்னடர்களிடம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐடி தலைநகரம்
இந்த சம்பவம் பெங்களூருவில் அடிக்கடி ஏற்படும் மொழி தொடர்பான பஞ்சாயத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மீண்டும் இந்தி பேசுவோருக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பெங்களூர் நகரை பொறுத்தவரை, இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைநகரம் என்றும் சொல்லும் அளவிற்கு பல ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. கோடிக்கணக்கான மக்கள் பெங்களூரில் வாழ்கிறார்கள்.. அங்கு கன்னட மக்களுடன் இந்தி, தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் குடியேறி வசிக்கிறார்கள்.
ಹಿಂದಿ ನಮ್ಮ ರಾಷ್ಟ್ರ ಭಾಷೆ ಅಲ್ಲ. pic.twitter.com/sKBlGmbdX0
— ವಿನಯ್. ಎಸ್. ರೆಡ್ಡಿ (@Vinayreddy71) April 18, 2025
ஆட்டோ டிரைவருடன் வாதம்
இந்த சூழலில் ஆட்டோ டிரைவருடன் வடமாநில வாலிபர் இந்தி பேசினால் தான் பெங்களூரில் வாழ முடியும் என்று பேசிய வீடியோ வைரலானதால், சமூக ஊடகங்களில் கன்னடர்கள் கடுமையாக அவரை விமர்சித்து வருகிறார்கள். பலர் ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
என்ன நியாயம்
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "நான் கன்னட ஆதரவுடன் வெறித்தனமாக நடந்து கொள்வோரை ஆதரிக்கவில்லை, ஆனால் வீடியோவில் உள்ள இந்தி நபர், பதிலடிக்கு மிகவும் தகுதியானவர். என்று கூறினார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், வட மாநில நபர் வேறு எங்கிருந்தோ இங்கு வந்து உள்ளூர்வாசிகள் தங்கள் மொழியைப் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என் கேள்வி எழுப்பி உள்ளார்
இந்தி தெரியும்
அதேநேரம் இன்னொரு நெட்டிசன் "பெங்களூரில் உள்ள பெரும்பாலான கன்னடர்களுக்கு இந்தி தெரியும். பிறகு ஏன் கன்னடத்தில் தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள்.. இந்தி அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக மாறினால், நீங்கள் உடனடியாக அதைக் கற்றுக்கொள்ள முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்... முடியாது அல்லவா.. அது போலவே மற்றவர்களையும் கன்னடம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.. மொழி என்பது ஒரு தகவல் தொழில் தொடர்பு சாதனம் தான். ஒருவரைக் கொள்ளையடிக்கும் கொள்கை அல்ல," என்று இன்னொரு நெட்டிசன் கூறினார்.
துணிச்சல் இல்லை
இதேபோல் ஒரு நெட்டிசன் கூறுகையில், "இந்தியுடன் ஆணவமும் வெறுப்பும் வருகிறது! வேறு எந்த மொழி பேசுபவர்களும் தங்கள் மொழியில் பேச வேண்டும் என்று கோரும் துணிச்சல் கிடையாது. மொழி என்பதை விரும்பி பேசுவதாக இருக்க வேண்டும்..கட்டாயப்படுத்தி திணிப்பதாக இருக்கக்கூடாது" என்றார். இப்படியாக விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications