நள்ளிரவு.. அந்த மாதிரி பார்ட்டி.. கலந்துக்கலைன்னு சொன்னாரே பிரபல நடிகை.. போதை சோதனையில் பாசிட்டிவாம்
பெங்களூர்: பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ரேவ் பார்ட்டியில் பங்கேற்ற நடிகைகள் ஹேமா, ஆஷா ராய் உள்பட 84 பேர் போதை மருந்து பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அனைவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். முன்னதாக இந்த நடிகைகள் இந்த பார்டியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியிருந்தனர்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் இந்தியாவின் ஐடி தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள பெங்களூரில் நாடு முழுவதிலும் இருந்து ஐடி துறையை சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் பணியாற்றி வருகிறார்கள். வார இறுதி நாட்களில் பெங்களூரில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறும்.

பிறந்தநாள் பார்ட்டி: இந்த நிலையில் தான், பெங்களூர் புறநகர் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தெலுங்கு திரைப்பிரபலங்கள், ஐ.டி. ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்று இருந்தனர். அப்போது விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக பெங்களூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனை: இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதற்கிடையே போலீசார் நடத்தும் தகவல் கிடைத்ததும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் தப்பி ஓட முயற்சித்தனர். எனினும் போலீசார் 100-க்கும் மேற்பட்டோரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருந்து நிகழ்ச்சி: அப்போது ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் வாசு என்பவருக்கு பிறந்த நாள் எனவும், இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூர் பண்ணை வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததும் கண்டறியப்பட்டது. போதை விருந்துக்கு தலா ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வரை நுழைவு கட்டணம் பெறப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக ரூ.50 லட்சம் செலவில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
பங்கேற்கவில்லை என கூறிய நடிகைகள்: பிடிபட்டவர்களிடம் தெலுங்கு திரைத்துறையினர் பலர் தொடர்பில் இருப்பதும் விசாரணையில் தெரிந்தது. தெலுங்கு நடிகை ஹேமா போதை விருந்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் மற்றொரு தெலுங்கு நடிகை ஆஷா ராய்யும் பங்கேற்றதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை இருவரும் மறுத்து வீடியோ வெளியிட்டனர். எனினும், பண்ணை வீட்டில் நடைபெற்ற போதை விருந்தில் அரசியல் வாதிகள் யாரும் பங்கேற்கவில்லை என்றும் நடிகை ஹேமா உள்பட சில நடிகைகள் இருந்ததாகவும் பெங்களூர் போலீஸ் உறுதி செய்தது.
சோதனையில் உறுதி: அதனை தொடர்ந்து இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பிடிபட்ட 100 - க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் கைப்பற்றப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரத்த மாதிரிகளின் முடிவுகள் இன்று வெளியானது.
Bengaluru Rave Party: Telugu Actress Hema, 85 Others Test Positive For Drugs
அதில் போதை விருந்தில் பங்கேற்றவர்களிடம் 98 பேருக்கு சோதனை நடத்தியதில் 84 பேர் போதை பொருட்களை பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது. தெலுங்கு நடிகைகள் ஹேமா மற்றும் ஆஷா ராய் ஆகிய 2 பேரும் போதை மருந்து பயன்படுத்தியது சோதனையில் உறுதியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக 59 ஆண்களுக்கும், 25 பெண்களுக்கும் ரத்த பரிசோதனையில் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
84 பேருக்கு நோட்டீஸ்: இதையடுத்து உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். பெங்களூரில் நடைபெற்ற பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தியதாக தெலுங்கு நடிகைகள் சிக்கியது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications