பெங்களூரில் பொதுஇடங்களில் வாகனங்களை நிறுத்த இனி தனி கட்டணம்.. பிப்ரவரியில் அமல்
பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் தான் ஷாப்பிங் செல்லும்போது பொதுஇடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தனியாக கட்டணம் வசூலிக்க பெங்களூர் பெருநகர ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த நடைமுறையை பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூர் நகரில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள்தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. பெரும்பாலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

பெங்களூர் 2வது இடம்
உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூர் 2வது இடத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தாங்கள் விரும்பிய இடத்துக்கு உடனடியாக செல்ல முடியாத நிலை உள்ளது. தினமும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
நெரிசலுக்கு என்ன காரணம்
இந்த போக்குவரத்து நெரிசலுக்கு அகலமான சாலைகள் இல்லாததும், சாலையோரங்கள், நடைபாதைகள் உள்ளிட்ட பிற பொது இடங்களில் வாகனங்களை நிறுத்துவதும் முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் தான் பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க பெருநகர பெங்களூரு ஆணையம் முடிவு எடுத்துள்ளது.
திட்ட அறிக்கை
அதன்படி, பெங்களூரு பெருநகர ஆணையத்தின் கீழ் உள்ள 5 மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு?
அதன்படி இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ.15, ஒரு நாளுக்கு ரூ.175 கட்டணம், ஆண்டுக்கு ரூ.3,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கார்களுக்கு ஒருமணிநேரத்துக்கு ரூ.30, ஒரு நாளுக்கு ரூ.300, ஆண்டுக்கு ரூ.9,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுஇடங்களில் வாகனங்களை நிறுத்துவது குறையும். இது போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
பிப்ரவரியில் அமல்
எந்தெந்த சாலைகளில் எல்லாம் வாகனங்களை நிறுத்தினால் கட்டணம் விதிக்கப்படும் என்பதையும் 5 மாநகராட்சி ஆணையர்களும் அடையாளம் கண்டுள்ளனர். இந்த திட்டத்துக்கு விரைவில் அரசு ஒப்புதல் வழங்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த புதிய கட்டண முறை அடுத்தமாதம் (பிப்ரவரி) முதல் அல்லது 2வது வாரத்தில் பெங்களூரில் உள்ள 5 மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமலுக்கு வர உள்ளது.
அதே சமயம் நகரில் உள்ள சாலைகள், நடைபாதைகளில் தேவையில்லாமல் நிறுத்தப்படும் வாகனங்களை டோயிங் செய்யவும் 5 மாநகராட்சிகளும் முடிவு செய்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை டோயிங் செய்வதுடன், போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதற்காக அபராதம் விதிக்கவும், டோயிங் கட்டணத்தை வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications