காதல் மொழி பேசிய காதலன்.. மேலே படர்ந்த 3வது கை! பட்டியலின சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. அலறிய கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் தலித் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

கடந்த 4ம் தேதியன்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது இச்சிறுமி பயிலும் கல்வி நிறுவனத்தில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞனும் பயின்று வந்திருக்கிறார். இவர், சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். தொடக்கத்தில் சிறுமி இந்த விவகாரத்திலிருந்து விலகி செல்ல, விடாத இளைஞர் துரத்தி துரத்தி காதலித்திருக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் அந்த சிறுமியும் காதலிப்பதாக கூறியுள்ளார். இப்படி இருக்கையில் கடந்த 4ம் தேதியன்று மாண்டியாவில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வருமாறு சிறுமியை இளைஞர் அழைத்திருக்கிறார்.

In Karnataka, 3 people were arrested for making a video of raping a Dalit girl and threatening her

அங்கு இருவரும் காதல் மொழி பேசியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த இளைஞன் சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறார். மட்டுமல்லாது தனது நண்பர்கள் இருவரையும் போன் செய்து அழைத்திருக்கிறார். அவர்கள் சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சோகம் என்னவெனில் சிறுமியின் காதலன் என்று சொல்லிக்கொண்ட நபர், இந்த கூட்டு பலாத்கார சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார் என்பதுதான்.

இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் வீடியோவை சோஷியல் மீடியாவில் கசியவிட்டுவிடுவோம் என்று மிரட்டி சிறுமியை அனுப்பி வைத்திருக்கின்றனர். வீட்டிற்கு வந்த சிறுமி கதறி அழுது தனது பெற்றோரிடத்தில் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பெயரில் ஒரு சிறுவன் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த காவல்துறையினர் கூறுகையில், "பிரபல கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த 17 வயது தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமிக்கும், அதே நிறுவனத்தில் பயின்று வந்த 18 வயது இளைஞனுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சிறுமியை தனியாக சந்திக்க விரும்பிய இளைஞன் லாட்ஜில் ரூம் எடுத்து, சிறுமிக்கு போன் செய்து வர சொல்லியிருக்கிறார். அங்குதான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தில் சிறுவன் ஒருவனும் ஈடுபட்டிருக்கிறார். மொத்தமாக மூன்று பேரை கைது செய்திருக்கிறோம். குற்றத்திற்கான ஆதாரங்கள் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மூவர் மீதும், போக்சோ, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளனர். காதலனை நம்பி சென்ற சிறுமி காதலனாலேயே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+